
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

ஓதிய நந்தி உணருந் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போதம் இருபத் தெழுநாள் புணர்மதிச்
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.
English Meaning:
Worship Bhairavi for 27 Days; Her Trident BlessesShe is the Grace that Nandi knows
She expounds the Vedic Dharma in accord;
He who meditates on Her
For a lunar month of twenty seven days,
Will envision Bhairavi,
Her trident blessing him.
Tamil Meaning:
நூல்களால் சொல்லப்படுகின்ற சிவனுடையதும், உணர்வுடையோரால் உணரப்படுவதும் ஆகிய திருவருட்சத்தியும், வேதத்தின்வழி வழுவாது ஒழுகிவருவோரால் வழிவழியாக உபதேசிக் கப்பட்டு வருகின்ற ஞானமும், மேற்கூறியவாறு இருபத்தேழு நாள்களை உடைய ஒரு மதி வட்டங்காறும் விளங்கி நிற்கின்ற ஓமாக்கினியை வயி ரவிதேவி தன் அடியார்களின்முன் சூலத்தோடு வந்து அருள்புரிவாள்.Special Remark:
`நந்தி அருள், உணரும் அருள்` எனத் தனித்தனி முடிக்க. `நீதி -முறை, நீதியில்வந்து` என இயையும். சோதி, ஆகு பெயர். திரு வருள், போதம், சோதி என்பன ஒரு பொருள்மேல் வந்த பல பெயராய் வயிரவியையே குறித்தன. `சூலத்தோடு` என உருபு விரிக்க. `சூலம் அவட்குச் சிறப்படையாளம்` என்பது தோன்றுதற் பொருட்டு அதனை விதந்தவாறு.வருகின்ற மந்திரத்துள் மறித்தும் `சூலி` என்றலும் இது பற்றி.இதனால், மேற்கூறிய வழிபாட்டினது சிறப்பு வலியுறுத்தப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage