
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி யருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள வாமே.
English Meaning:
She Grants Mukti to tried DevoteesPrattling in ignorance,
They spent their lives away,
Alas! these poor men!
She, Primal One, grants Mukti
To all those
Who in constant devotion seek;
She has eyes three fish-shaped,
She has lips red
That warble words sweet
Her face is compassion full,
That in Grace reveals before me.
Tamil Meaning:
ஞானத்தைக் கொடுத்துப் பின் அது வழியாக முத்தியைத் தருகின்ற முதல்வியாகிய சத்தியது கயல்போலும் மூன்று கண்களும், அறைகூவி அருள்செய்கின்ற சிவந்த வாயும், முகத்திலே உள்ளதாகிய திருவருட் பார்வையும் அடியார்களுக்குத் கண்முன் னாகவே நிற்பனவாயிருக்க, அவைகளை எண்ணித் துதியாமல் அறிவில்லாதமக்கள் எதைஎதையோ பிதற்றிவிட்டுப் போய்விடுகின் றார்கள்; அவர்தம் அறியாமை இருந்தவாறு என்!Special Remark:
முயற்று, `முயற்சி` என நின்றது. `முயற்சி` என்பதே பொருள் - முயற்சி, இங்கு ஞானச் செய்திகள். இது மேற்கூறிய அஞ் செழுத்தோதலைச் சிறப்பாகக் குறித்தது. `அதுவழியாக முத்தியைத் தருபவள்` என்பதனால், முன்னே அம்முயற்சியைத் தருதல் பெறப் பட்டது. கயலாகிய உவமை இனம் பற்றி நெற்றிக் கண்ணிற்கும் சொல்லப்பட்டது.இதனால், திருவைந்தெழுத்தை ஓதுபவர்க்குச் சத்தி நேரே எளிவந்தருளுதல் கூறப்பட்டது. இதனுள் உயிரெதுகையும், மூன்றாமெழுத் தெதுகையும் வந்தன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage