
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

இருளது சத்தி வெளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என் றெண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே.
English Meaning:
Truth is BlissDark is Sakti, Space is Lord,
Truth is Union in God,
Bliss it is for the Holy Ones;
Thus in doubt-free mind,
Adore Lord;
The Primal One,
Will sure bless you.
Tamil Meaning:
சிவம் வெளிப்படாது நிற்க நிகழும் செயல் களெல்லாம் ஆதிசக்தியுடையன. அவற்றின் பயனாகப் பின்னர்ச் சிவம் வெளிப்படுவதாகும். அவ்வெளிப்பாட்டினைப் பெற்ற புண்ணியர்கள் இம்மையிலும் பொருளாகத் தெளிவது சிவானந்தம் ஒன்றையே. அத்தகைய தெளிவைப் பெற்ற உள்ளமே சிவனுக்கு இருப்பிடம் என்று அறிந்தால், சிவன் முன்னின்று அருள்செய்வான்.Special Remark:
`அது` என்பன பலவும் பகுதிப் பொருள் விகுதி. ``வெளியது`` என்பதில், `வெளியதாம்` என ஆக்கம் வருவித்துக் கொள்க. `புண்ணியர் பொருளது போகத்துள் இன்பம்` எனக் கூட்டுக. போகம் - இம்மை நுகர்ச்சி. தெய்வத்தின் இடத்தை, ``தெய்வம்`` எனப் பாற்படுத்து ஓதினார்.இதனால், மேற் கூறிய படைத்தல் முதலிய செயல்களின் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage