
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.
English Meaning:
She Sustains All WorldsAnklets, bangles, conch, and discus
She wears;
She is pervasive Supreme,
In eight quarters of globe,
She is Goddess,
She is Parasakti,
She sustains the universe
And its eight cardinal points,
She is possessed of Wealth of Grace
She is seated on Lotus
She who our worship compells.
Tamil Meaning:
இறைவியாகிய பராசத்தி மேற்கூறிய மனோன் மனியாய்ப் பூசிக்கப்படும் பொழுது கன்னித் தன்மையைக் குறிக்கச் சிலம்பும், வளையலும் அணிந்தவளாகவும், உலகத்தைக் காக்கின்ற செயலைக் குறிக்கச் சங்கு சக்கரங்களை ஏந்தியவளாகவும், எட்டுத் திசையும் நிறைந்தவளாதலைக் குறிக்க எட்டிதழ்த் தாமரையின் நடுவில் உள்ளவளாகவும் கருதப்படுவாள்.Special Remark:
``எண்டிசை யோகி``, ``எண்டிசை தாங்கும் அருட் செல்வி`` என்பன உடம்பொடு புணர்த்தலாய் நின்றமையின், இதற்கு இவ்வாறுரைத்தல் கருத்தாதல் அறிக. யோகி - பொருத்தி யிருப்பவள்.மேற்கூறிய மனோன்மனியைத் தியானிக்கும் முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage