
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

தென்னன் திருநந்தி சேவகன் றன்னொடும்
பொன்னங் கிரியினிற் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோ
டுன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே.
English Meaning:
Worship Bhairavi and Be With SivaWith gait rivalling the cow-elephant
And one with Siva entwined is Tripurai,
He who meditates constantly on Her
Will with Siva Himself be,
The Lord that is Nandi,
The Hero Mighty;
With Him in Golden Mount of Kailas will he be;
All the World will there adore him.
Tamil Meaning:
உள்ளத்தில் பொருள் வடிவாக எண்ணப்படுகின்ற திரிபுரை மந்திரத்தை, உயர்த்துச் சொல்லப்படுகின்ற அன்பினாலாகிய மேற்கோளோடு வாழ்நாளின் இறுதிவரை சிவனொடு வைத்து, சொல் வடிவிலும் ஓதிவரும் அன்பன் பொருட்டாக அவளை நிலவுலகம் கயிலாய மலைபோலவே சிவனோடு தன்னகத்து வைத்துப் போற்று கின்றது.Special Remark:
சேவகன் - வீரன். கிரியினில் - கிரியைப் போல. பரிதல் - அன்பு செய்தல். `கட்டு, ஒட்டு` முதலியன போல, ``பிடி`` என்பது முதனிலைத் தொழிற்பெயர். ``பரி பிடி`` நிகழ்கால வினைத் தொகை. `பிடியொடு` என உருபு விரிக்க. ``திரிபுரை`` என்றது அவளது நாமத்தை. ஓதி நின்றானுக்காக அவள் கயிலையிற் போல சிவனோடு வெளிநிற்றலை, ``பூதலம் போற்றிடும்`` என உலகின்மேல் வைத்துக் கூறினார். `ஓதி நின்றான் அவனைச் சிவனோடு இங்குத்தானே காண்பான்` என்றவாறு.இதனால், `மேற்கூறிய வழிபாடு இம்மையிற்றானே பயன் தரும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage