
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றுப் பிதற்றறுத் தாளே.
English Meaning:
She Dispelled Thoughts of Celestial StatusShe abided there,
The bejewelled Mother in my heart,
She in endearment stood there,
Saying ``Nama Siva``
She dispelled from me
All thoughts of rank and status
Brahma and the rest enjoy,
She destroyed in me
All speech that from ignorance arises.
Tamil Meaning:
சத்தி எனது உள்ளத்தில் பொருந்தியதனோடு அதனை விரும்பியும் இருக்கின்றாள். அவள், நான் அஞ்செழுத்தை ஓதி உணரும் பொழுது அவ்விடத்தைப் பற்றியிருக்கின்றாள். அதனை ஓதாத பொழுது நீங்கிவிடுகின்றாள். ஆயினும், பிற மந்திரங்களையும், பயனில்லாத சொற்களைப் பேசுதலையும் என்னிடத்தினின்றும் நீக்கிவிட்டாள்.Special Remark:
``நயந்தனள் மேவி`` என்பதனை `நயந்து மேவினள்` என மாற்றி யுரைக்க. அஞ்செழுத்தில் யகாரம் தொகுத்தலாயிற்று. பதம் - காலம். பற்றும் - பற்றுவாள். `பதத்தில் அங்கே பற்றும்` எனக் கூட்டுக. மற்று. வினை மாற்றின்கண் வந்தது. பிதற்றுதலுக்குச் செயப் படுபொருள் ஆற்றலால் வந்தது.இதனால், `சத்தியது விளக்கம் உள்ளத்தில் இடையறாது நிற்றற்குத் திருவைந்தெழுத்தை மானதமாக ஓதுதலை ஒழியாது செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage