
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

குலாவிய கோலக் குமரிஎன் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.
English Meaning:
She is Kala RadiantShe the Virgin in my heart dwells;
In endearment eternal;
She sports in my heart;
And reaches my head;
And there she shines
With Her Kalas radiant.
Tamil Meaning:
மேற்கூறியவாறு என் உள்ளத்திலே மகிழ்ச்சியோடு இருக்கின்ற அந்தச் சத்தி அவ்வாறு அளவற்ற காலங்கள் இருந்தும் நீங்குதல் இல்லாதவளாய், நான் பிராசாத யோகத்திலே உழன்று நின்ற பொழுது அதன் கலைகளில் முடிவானதற்கு இடமாகிய துவாத சாந்தத்தில் பொருந்தி நிற்பவளாயினாள்.Special Remark:
`இஃது அவளது கருணையிருந்தவாறு` - என்பது குறிப்பெச்சம். `உணர்ந்தவழி` என்பது ``உணர்ந்து`` எனத் திரிந்து நின்றது. பிராசாத கலையில் முடிவாயுள்ளது உன்மனை. தலை - முடிவில் உள்ளது. இதனால், அவளது பேரருள் கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage