
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.
English Meaning:
She in the Heart of Pure OnesBhairavi the Eternal, Neeli the blue-hued,
Nisachari that sojourns in dark,
Into the heart purified of Evils Three — lust, anger and ignorance
She enters
And of Herself Grace confers,
She the consort of Lord Primal,
Seek Her in this world
And She will bless you.
Tamil Meaning:
துன்பத்தை நீக்க முன்னிற்கும் வயிரவி நீல நிறத்தை உடையவள்; இரவில் உலாவுபவள்; மனமாகிய ஒன்றும், வாக்கும் காயமுமாகிய ஏனை இரண்டும் ஒருவழிபட்டோரது உள்ளத்தில், தானே விளங்கி அருள்புரிபவள்; சிவபிரானுக்கே உரியசத்தி; அவளைத் துதித்து, அவளது நல்ல திருவருளை இவ்வுலகத்தில் பெற விரும்புங்கள்.Special Remark:
இரவில் உலாவுதல் தீயவரை ஒறுத்தற்கு. `மனம்` என்பதும், `உள்ளம்` என்பதும் வேறு வேறாதலை அறிக. ``தேவர் பிரானுக்கு நாயகி`` என்றது, `வயிரவி சிவசத்தியே`` என்பதனை வலி யுறுத்தியதாம். இத்தொடர் ஒருபெயர்த்தன்மைப்பட்டு, `சென்றருள்` என்பதனோடு வினைத்தொகையாகத் தொக்கது. `நன்றாகிய அருள்` என்க. ``ஞாலத்து நாடிடும்`` என்றது, `உலகில் பகை முதலிய துன்பங்கள் நீங்கி வாழலாம்` என்றவாறு.இதனால், வயிரவி வழிபாடு உலகில் வரும் துன்பங்களை நீக்குவதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage