
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கும் ஆதி முதல்வியே.
English Meaning:
Sakti is Supreme EnergyThe Vedas,
The creation diverse, movable and immovable,
The elements five,
The quarters four of globe
Are all but that Mother of Eyes Three;
The spreading darkness,
The spaces vast,
The life species several,
The Light that is Parapari—
All these are but the Primal Sakti;
As One Energy She pervades all.
Tamil Meaning:
முக்கண்ணியும், சோதி (ஒளி) வடிவானவளும், பராபரையும், `ஆதி` என்னும் பெயரொடு முதல்வியாய் நிற்பவளும் ஆகிய வயிரவி தனது ஆற்றலால் வேதம் சராசரப் பொருள்கள், ஐம்பூதம், நான்குதிசை, இருள், ஒளி, பலவகை உடம்புகளாய்த் தோன்றுகின்ற பல உயிர்கள் முதலிய எல்லாமாய் நிற்கின்றாள்.Special Remark:
மேல், `திரிபுரை` எனப்பட்ட அவளே இங்கு, `வயிரவி` எனப்படுகின்றாள் என்பது உணர்த்துதற்கு முன்னை யதிகாரத்தில், ``வைத்த பொருளும்`` (1042) என்னும் மந்திரத்திற் கூறியதனையே இங்கும் கூறினார். பர+ அபரை = பராபரை; மேலாய பொருளும், கீழாய பொருளுமாய் நிற்பவள். ஒடு உருபு ஆனுருபின் பொருளில் வந்தது.இதனால், வயிரவி உலகப் பயனைத் தருதற்கு உரியவள் ஆமாறு குறிப்பால் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage