
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

உபாயம் அளிக்கும் ஒருத்திஎன் உள்ளத்
தபாயம் அறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியகத் துள்ளே
அவாவை யடக்கிவைத் தஞ்சல்என் றாளே.
English Meaning:
She Contained DesiresShe taught me the miracle,
She quelled the terrors of my heart,
She fostered love divine in me,
In the Sushumna that bathes the Moon in full light
She contained my desires and said,
``Fear not.
Tamil Meaning:
எல்லாவற்றுக்கும் வழியைத் தருகின்ற ஒப்பற்றவள் ஆகிய சத்தி எனது மனத்தில் உண்டாகின்ற தீங்குளையெல்லாம் அறவே போக்கி, அவ்விடத்தில் அன்புவிளையச் செய்து, நல்லாள் ஆகிய குண்டலியை விளங்கச் செய்கின்ற சுழுமுனை நாடியினுள்ளே எனது மனத்தை ஒடுங்கப் பண்ணி `இனி நீ எதற்கும் அஞ்சவேண்டா` என்று என் அச்சத்தை நீக்கியருளினாள்.Special Remark:
`சுபா` என்பது `சுவா` எனத் திரிந்தது. சுபா - சுபை; நல்லவள். துயிலுணர்ந்தாளாயின் எல்லா நலன்களையும் தருதல் பற்றிக் குண்டலியை `நல்லாள்` என்றார். அவாவுதலைச் செய்து அதனால் தீங்கு விளைக்கின்ற மனத்தை ``அவா`` என்றார், ஆகு பெயரால். இதன்கண் ஈரடி எதுகை வந்தது. இது வருதற்பொருட்டே `சுபா` என்பதை, ``சுவா`` எனத் திரித்து ஓதினார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage