
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லியல் கிஞ்ச நிறம்மன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே.
English Meaning:
Bhairavi Further DescribedOf ethereal Form, vine-like,
Vengeful to those who err,
She is wisdom and knowledge true
She is bedecked in jewels,
She is green as a parrot,
Gem-like lustrous is Her Form,
Plaited with precious stones several is Her robe.
Tamil Meaning:
மேலும் இவள், மென்மையான இயல்பை உடையவள்; வஞ்சிக் கொடிபோலும் வடிவினை யுடையவள்; சிறிது சினங்கொண்ட மனத்தினள்; பலகலையும் உணர்ந்தவள் ; தோன்றுகின்ற வாய் முள்முருக்க மலர்போலச் சிவந்திருப்பவள்; நீல மணி போன்ற நிறத்தை உடையவள்; பல நிறத்தோடும், பல மணிகளோடும் கூடிய உடையை அணிந்தவள்.Special Remark:
``சொல் இயல்`` என்பதில் இயலுதல், அதற்குரிய இடத்தின் மேல் நின்றது. கிஞ்சுகம் `கிஞ்சம்` என மருவிற்று. `காணும் திருமேனி கல் இயல் ஒப்பது` எனக் கூட்டுக. ``ஆடையும்`` என்னும் உம்மை, சிறப்பு. மணியை உடையதனை ``மணி`` என்றார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage