
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதி பராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மனி மங்கலி
ஓதுமென் உள்ளத் துடன்முகிழ்த் தாளே.
English Meaning:
She Blossoms in Prayerful HeartShe is the Beginning,
She is the Beginningless,
She is the Para Sakti,
She is Para Parai
That Lord`s Form shares Half,
She is the bejewelled Mother Supreme,
She is the End of Samadhi,
Manonmani, the Jewel of Inmost Thought,
In my prayerful heart,
She blossomed exuberant.
Tamil Meaning:
உலகத்தைத் தோற்றுவிக்க நினைப்பவளும், அத்தோற்றத்திற்கு முன்னே உள்ளவளும், சிவத்தில் செம்பாதியாய் நிற்பவளும் ஆகிய பராசத்தி, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவற்றிற்கு அப்பாலும் உள்ளவளாய்ப் பின்பு சமாதியில் மேற் கூறிய வாறு மனோன்மனியாயும், நன்மையையே உடையவளாயும் உள்ள அவளைத் துதிக்கின்ற எனது உள்ளத்தில் விரையத் தோன்றினாள்.Special Remark:
``பராபரை`` என்பது எல்லாப் பொருளிலும் உள்ளன வளாதலைக் குறித்தது. இதுமுதலாக, ``மங்கலி`` என்பது காறும் வருவனவற்றில் `ஆய்` என்பது வருவித்துக்கொள்க.இதனால், சத்தி, `பரை, ஆதி, அருள்வல்லி` என்னும் மூன்று நிலைகளை உடையவளாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage