
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே.
English Meaning:
She is of Kalas TwelveShe is the Beginning, She is the Beginningless
She is the Cause, She is the Uncaused
She taught Vedas to Vedic Sages
She is abiding Light Divine,
She is the Self-Manifest Light
She that became Half of Siva`s Form,
She, of Kalas twelve, Para Parai.
Tamil Meaning:
சத்தியே வேதியர்கள் பொருட்டு வேதத்தை நுட்பமாக ஓதியும், உணர்த்தியும் நின்றாள். ஒளி வடிவினனாகிய சிவனுக்கு அவ்வுருவமும் ஆவாள். பன்னிரு கலையை உடைய பிரணவ ரூபியாகிய குண்டலியாயும் விளங்குவாள்.Special Remark:
முதலடியில் உள்ளவை, பாதி, பராபரை இவற்றிற்குப் பொருள் மேலே கூறப்பட்டது. ஆய்தல் - நுணுகி நிற்றல். வேதியர், `சொல் நயம், ஓசை நயம்` என்பவற்றைச் சிறப்பாக விரும்புபவர் ஆகலின், அவர்கட்கு வேதத்தை அவ்வாறெல்லாம் அருளிச்செய்து, அடியார் கட்கு அருட்டிருமேனியாய் நின்றாள் என்க.இதனால், சத்தி அவரவர்க்கு ஏற்ப அருள்புரிதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage