
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
பதிகங்கள்

கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னிஅங் கைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குளர்
என்னேஇம் மாயை இருளது தானே.
English Meaning:
The Virgin Bore the Five GodsShe the Virgin Eternal,
And Virgin She ceased to be not
When She made love,
And bore Children Five;
And among them is Siva too
Who Books of Truth composed!
Oh, this Maya!
Dark, dark indeed it is!
Tamil Meaning:
பராசக்தியின் வயிற்றினின்றும் பிறந்த ஆதி சத்தி யாகிய பெண் தனது கன்னித்தன்மை அழியாமலே ஒருவனுக்கு மனைவியாய்ப் பொருந்தி ஐவர்மக்களைப் பெற்றாள். அவர்கள்பால் நல்ல நூல்களைக் கேட்டுணர்ந்த அறிவரும் பலர் உளர். இவ்வியப்பு தான் என்னே!Special Remark:
`கன்னியும் அழிந்திலள்` எனச்சிறப்பும்மையை மாற்றி யுரைக்க கன்னித்தன்மை அழியாமையாவது, படைத்தலைக் கரணத்தால் செய்து திரிபு எய்தாது, சங்கற்ப மாத்திரையாற் செய்து, என்றும் ஒருபெற்றியளாய் இருத்தலாம். `காதலியாய்த் துன்னி` என ஆக்கம் வருவித்துக்கொள்க. துன்னப்பட்டவனாகிய ஒருவன் ஆதி சிவனாதல் வெளிப்படை. ஐவராவார். `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்போர். இவர் யாவரும் சுத்த தத்துவத்தில் உள்ளோர். மொழி - நூல்; என்றது ஆகமங்களையும், அவற்றிற் சொல்லப்பட்ட மந்திரங்களையும். ``பன்னிய`` என்னும் பெயரெச்சம் ``பகவர்`` என்னும் கோடற்பொருட் பெயர் கொண்டது. ஆகமங் களைப் பிரணவர் முதலியோர் சதாசிவ மூர்த்தியிடத்துக் கேட்டமை முதல் தந்திரத்துள் `ஆகமச்சிறப்பு` என்னும் அதிகாரத்துள் விளக்கப் பட்டது. மந்திரத்தைச் செலுத்தி நிற்போர் மந்திரமகேசுரர். இவர்களும் மகேசுரரைச் சூழ்ந்திருப்பவர். ஆகவே, ``அங்கு`` என்றது சதாசிவ புவனத்தையும், மகேசுர புவனத்தையும் ஆயிற்று. அரிதற்கரிய பொருளாய் வியப்பைத் தருதல் பற்றியே, இதனை ``மாயை`` என்றும், ``இருள்`` என்றும் கூறினார்.இதனால், ஆதிசத்தி தனது சங்கற்பத்தானே சதாசிவர் முதலிய முதல்வர்களைப் படைப்பவளாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage