
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடம் கூடல் பெரிது
குறியறி ஆவகை கூடுமின் கூடில்
அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.
English Meaning:
Divine Swan BecomingThey who see not the Self within
Will see not the Goal without;
They who see not the Self within
Will incarnate bodies several;
Unite in the Lord, the Self effacing;
And in knowledge undifferentiated,
You the ``Divine Swan`` (I-and-He united) became.
Tamil Meaning:
`குறிக்கொளத் தக்கது இது` என அறியாதவர்கள் அதனை அடைதல் எங்ஙனம் கூடும்? (கூடாது) அவர் உடம்பிற் கட்டுண்டு நிற்குங் காலம் பெரிதாகும். ஆகையால், நீவிர், `குறிக்கொள்ளத் தக்க பொருள் இது` என்பதை அறிந்து, பின்பு அதுவே யாகும்படி பொருந்தி நில்லுங்கள். நின்றால், உங்களுடைய அறிவு அறிவாய் இருக்கும். வீட்டின்பமும் சித்திக்கும்.Special Remark:
குறி - குறிக்கப்படும் பொருள். முதனிலைத் தொழிற் பெயர் ஆகபெயராய்ச் செயப்படுபொருளை உணர்த்திற்று. காணுதல், இங்கு, `அடைதல்` எனத்தன்காரியம் தோற்றி நின்றது. கூடல், அதற்குரிய காலத்தைக் குறித்த ஆகுபெயர். என் வினையெச்சப் பொருள் தந்தது. `வரிப்புனை பந்து`, என்பதிற்போல. ``ஆவகை``, வினைத்தொகை. அன்னம் - சோறு. அது, ``பாதகமே சோறு பற்றினவா`` என்பதிற்போல நின்றது உம்மை, சிறப்பு.இதனால், `உயிர் குறிக்கொளத் தக்க பொருள் சிவமே யாதலின், அதனை நின்மலாவத்தையால் அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage