
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.
English Meaning:
Grace of Sakti Leads to SivaAs fire and heat
Are Siva and Sakti;
With Him as Substance
She, Jiva`s awareness espouses;
Darkness and Light She is;
She pervades too Malas Three;
And then by Light of Grace
She makes Jiva the very Siva.
Tamil Meaning:
[`சிவன் அருள்` என்றும், `சிவனது சத்தி` என்றும் சொல்லப்படுவது ஒருபொருளேயாகும். அதனால்,] அருளாகிய சத்தி, தீ பொருளாய் இருக்க, சூடு அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றியிருத்தல்போல, சிவம் பொருளாய் இருக்க, தான் அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றி யிருக்கும். அங்ஙனம் இருக்கும்பொழுது அறிவாகியேயிருக்கும். (இது சத்தியின் `உண்மை` எனப்படும் சொரூபம்) அதுவே, `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும் மலங்களாயும் நின்று (உயிர்கள் சிவனை அறியாதபடி மறைக்கும். இந்நிலையில் அது, `திரோதனகரி, திரோதாயி` - என்னும் பெயர்களைப் பெறும். இஃது அதன், `பொது` எனப்படும் தடத்தம்) பின்பு அதுவே தனது உண்மையான அருளாகும்பொழுது, சிவன் உயிர்களுக்கு முன்போல மறைந்து நில்லாமல், இனிது விளங்கும் பொருளாய்த் திகழ்வான்.Special Remark:
``அருளது சத்தி யாகும் அரன்றனக்கு; அருளை யின்றித்தெருள்சிவம் இல்லை; அந்தச் சிவம்இன்றிச் சத்தியில்லை``l
``ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினைச் செய்ய ஏவும்
தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
ஆய்வர்``8
என்னும் சிவஞான சித்தியையும்,
``முயங்கி நின்று - (மலம்) பாகம் உற உதவு
திரோதாயி ஒன்று``
``நேராதல் மருவுங்கால், முன்
சினமருவு திரோதாயி கருணையாகித்
திருந்திய சத்தி நிபாதம் திகழும் அன்றே``3
என்னும் சிவப்பிரகாசத்தினையும் காண்க.
`போதமாய்` என ஆக்கம் விரிக்க. ``இருள் ஒளியாய் ஈண்டும் மும்மலம்` என்றது, `இருளுக்கு ஒளிவந்து பொருந்துதலால், அதற்கு மேலும் கூடுகின்ற மும்மலங்களாய் நிற்கும்` என்றவாறு இருள் - ஆணவம். நான்காவது தொகுத்தலாயிற்று. `இருளுக்கு ஒளி` என்பதைப் ``பிணிக்கு மருந்து``3 என்றது போலக் கொள்க. `ஒளியாவது மாயை` என்பது வெளிப்படை. ஆய் - ஆதலால். ஆதல் - பின்பு வந்து சேர்தல். ஈண்டுதல் - திரளுதல். எனவே, அவை கன்மம் ஆயின. மலங்களை ஏவுதலால், சத்தியமே மலமாக எண்ணப்பட்டது. `திருவருள் ஆக` என்பது கடைக்குறைந்து நின்றது. `திருவருளால்` என்பது பாடமாயின், `அது திருவருள் ஆக, அதனால்` என உரைக்க. நந்தி - சிவன்.
`சத்தி புணரும்; முன் மந்திரத்தில் சுட்டப்பட்ட அருளின் நிலைமையெல்லாம் தெரித்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage