
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில்
தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து)
ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.
English Meaning:
Mahavakyam—Samadhi Jnana FiniteIn the Bliss of Grace
That Siva-Sakti confers,
Let Jiva
In final Samadhi enter;
If thus as the end of fleshy body
Jiva realizes the inner awareness;
It shall attain the finite Lordly (Siva) State;
—This, the Word Exalted (Mahavakyam).
Tamil Meaning:
`சிவானந்தம்` என்பதும் சிவனது அருட் குணங்களில் ஒன்றேயாம். (வரம்பில் இன்பம்) ஆகவே, அச்சத்தி வழியாக ஞான நிலைகளில் முடிநிலையை அடைந்த உயிர் பின் சிவத்திலே அழுந்தி, ஐவகை உடம்புகளினின்றும் நீங்கி, அறிவே வடிவாய், அந்த அறிவுக்கு அறிவாய் உள்ள சிவத்திலேயே பிரிதல் இன்றி நிற்குமாயின் சிவனை முற்றும் பெறுதலாகிய மிகப்பெரிய பேறு உளதாகும்.Special Remark:
``தானே`` என்பது, `அந்த உயிரே` எனத் தேற்றப் பொருள் தந்தது. சமாதி - தான் அதுவாதல், கோபம் - கோவம், பாபம் - பாவம்` என வருதல்போல, `மகாபாக்கியம், என்பது, ``மகா வாக்கியம்`` என வந்தது. பாக்கியம் - பேறு இவ்வாறன்றி `மகா வாக்கியம்` என்றே கொள்ளுதற்கு இங்கு ஏதும் இயைபில்லாமை அறிக.இதனால், முன்மந்திரத்தில் குறிக்கப்பட்ட சிவானந்தம் வாய்க் குமாறும் `அதுவே பெரும்பேறாகிய ஆன்மலாம்` என்பதும் கூறப் பட்டன. இப்பேறு கிடைத்தற்குக் கூறப்பட்டவழி நின்மலாவத்தையே யாதலை நோக்குக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage