
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.
English Meaning:
Think of Siva and Draw Like HimStanding within,
He protects the worlds seven;
The good one who in love praises Him,
Close upon Him;
They who think not of Siva
Loud sob in distress;
How can those
Who centre not their thoughts in Him
Ever, ever reach Him?
Tamil Meaning:
ஏழுலகத்தில் உள்ள உயிர்களையும் சிவன் ஒப்ப நோக்கித்தான் அவற்றின் உள்நின்று காத்து வருகின்றான். (என்றாலும், சிலரே அதனை யுணர்ந்து, ஏனையவற்றைப் பற்றாது விடுத்து அவனிடத்திலே சென்று அடங்குகின்றனர். அங்ஙனம் அடங்கினவர்கள் சிவனது எண்குணங்களையும் தாங்களும் உடையவராவர். பலர் அவ்வாறு உணர்ந்து சிவனை அடைதல் இல்லை. அங்ஙனம் அடையாதவர்கள் உலகியலில் சிக்கித் துன்புறுகின்றனர். சிவனை அடைந்து அடங்காதவர்கள் சிவனது குணத்தைப் பெறுதலும் கூடுமோ! (கூடாது).Special Remark:
`சிவம்` எனப்பின்னர் வருதலால் `ஓம்புபவன் சிவன்` என்பதும் குணம் அவனுடையன என்பதும் போந்தன; ஓம்புதலை எடுத்துக் கூறினமையால், ஒப்ப நோக்குதல் பெறப்பட்டது. `ஓம்புபவன் ஒப்ப நோக்கினும் ஓம்பப்படும் உயிர்கள் பக்குவ பேதத்தால் பயன் பெறுதலில் வேறுபடுகின்றன, என்பதாம். ஆகவே, `அனைவரும் ஒருகாலத்திற்றானே நின்மலாவத்தை எய்தார்` என்பதாம் `சென்று` எனற்பாலதனை, `வந்து` என்றது இடவழுவமைதி `அக்குணம் கொள்ளலும் ஆமே` என்க. உம்மை சிறப்பு. ஏகார வினா, எதிர்மறை உணர்த்தி நின்றது. சிவனது எண்குணங்களாவன; தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை* இவைமுறையே சுதந்திரத்துவம், விசுத்ததேகம், நிராமயானமா` சருவஞ்ஞத்துவம்,அநாதி முத்தத்தன்மை, அலுத்த சத்தி. அநந்த சத்தி, பூர்த்தி` என வடமொழியில் சொல்லப்படும்* அலுத்த சத்தி, `குறைவில்லாற்றல் உடைமை` என்றும் சொல்லப்படும். பூர்த்தி, `திருத்தி` என்றும் சொல்லப்படும். அநாதி முத்தத்தன்மை `அநாதி போதம்` என்றும் சொல்லப்படும். சிவனைச் சேர்ந்தார். ``என் குணத்துளோமே``l எனக்கூறுமாறு காண்க.இதனால், அனைவரும் பக்குவபேதத்தால் ஒருங்கே நின்மலாவத்தையை எய்தாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage