
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.
English Meaning:
When Tattvas Are Transcended, Grace Descends and Union in Siva Takes PlaceHe, Jiva,
Abandoning Tattvas six times six
Realized the Self;
He the Finite became
And pervaded,
He (Jiva) in them (Tattvas) and they in him;
Yet transcending them
He passed into the Beyond;
And as Grace descends on him
He doubt-free Jnana attained
And Siva became.
Tamil Meaning:
`தத்துவம் முப்பத்தாறினுள் ஒன்றேனும் தான் அல்லன்` எனத் தெளிந்து, அவைகளை, `தான்` என மயங்கும் மயக்கத்தினுள் நீங்கினவன் எவனோ அவனே, அவற்றிற்கு வேறாகி, மேலே உள்ள பரவெளியை அடைந்து வீடு பெற்றவனாவன் அந் நிலையில் முன்பு இருந்த மயக்கம் நீங்கித் தெளிவு பெற்று, எளிதில் அணுக இயலாத சிவத்தை அடைந்து அதுவேயாவன், அதுவே அவன் அடையவேண்டிய இறுதி நிலையாகும். அந்நிலையில் சிவனைப்போல இவனும் வியாபகமாய், ஏனை எல்லாப் பொருள்களும் தன்னில் வியாப்பியமாய் நிற்க விளங்குவான்.Special Remark:
``ஆகி எய்த`` என்றது, `ஆகி எய்துதற் பொருட்டு` என்றது ஆகலின், அஃது இறுதியில் வைத்து உரை கூறப்பட்டது ``வீடு`` என்றது, வீட்டின்பத்தை. தேறா - தேறி. மருள்தேறுதலாவது, மருளின்றும் நீங்கித் தெளிவையடைதல். பின்னும், ``தெளிவுற்று`` என்றது, `அத்தெளிவு நிலைபெறப் பெற்று` என்றபடி. தீண்டாச் சிவம் - பற்றுதற்கரிய சிவம்.இதனால் மேல், `திருவருள் செய்வனவாகச் சொல்லப்பட்ட செயல்களில் இறுதியாக உயிர் பயனடைதல், இவ்வாறான நின்மலாவத்தையில்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage