
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.
English Meaning:
All Are Acts of GraceHe parted Himself
In halves two;
He created the cluster of Tattvas
That to body pertain;
He let me be into births and places several;
He took me into inert Arul Kevala State,
And there left me,
The Lord in me uniting.
Tamil Meaning:
எவ்வுயுரினின்றும் தன்னை வேறுபடுத்திக் கொள்ளாது, அதனோடு ஒன்றாகியே, அதற்கு அப்பனாகியும் இருக்கின்ற சிவன். எவ்வுலகிலும் உள்ள உடற்கூட்டத்தை `ஆண், பெண்` என இருசமபாதிகளாகப் பிரித்து வைத்துள்ளான். என்னையும் தன்னினின்றும் வேறுபடுத்தி, அத்தகையனவாகிய உடம்புகள் உள்ள அனைத்திடங்களிலும் செல்லவிடுத்து, அந்த உடம்புகளுக்குள்ளே புகுத்தினான். பின்பு தன்னினின்றும் என்னை வேறுபடுத்தாது ஒன்றாக்கிக் கொள்கின்ற அருட்கேவலத்திலே செலுத்தி, என்னோடு பொருந்தி நிற்கின்றான்.Special Remark:
``வேறுசெய்யா அத்தன்`` என்பதை முதலிற் கொள்க. இரண்டாம் அடியில் ``வேறு செய்தான்`` என்பது முற்றெச்சம். `என்னையும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்த லாயிற்று. அருட்கேவலமாவது, ஆன்ம தரிசனத்தில் தத்துவ சுத்தி நிகழ்ந்த பின்னர் ஆன்ம சுத்திக்கு இடைப்பட்ட நிலை. இதுவே துகளறு போதத்தில் * ஆம் அவதரமான கேவலம்` எனச் சொல்லப்பட்டது. இதைச் சிறப்பாகக் குறிப்பிடும் முகத்தால் நின்மலாவத்தை முழுதும் குறிக்கப்பட்டது. ``வேறுசெய்யா அருட்கேவலம்`` என்றதனால், `நின்மலாவத்தையே பதியைப் பசு பற்றும் நிலை` என்பது விளங்கும். இது சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தை. இதனால், ``வேறுசெய்தான் என்னை எங்கணும் விட்டுய்த்தான்`` என்றது, சகலத்தில் கேவலம். சகலத்தில் சகலம், சகலத்தில் சுத்தமாகிய யோகம் - என்னும் இவைகளைக் குறித்ததாயிற்று.`உடம்புகளை ஆண், பெண்` - என இருவகையாய்ப் பிரித்து வைத்ததைக் கூறியது, `அவத்தைகள் யாவும் இருபாற்கும் பொதுவே` என்பது உணர்த்துதற்கு, `மெய்த்தொகை வேறுசெய்தான்` என்றே கூறினமையால், உயிரில் - ஆண், பெண் - என்னும் வேறுபாடில்லை என்பதும், `உயிராகிய பறவைக்குக் கூடாய் உள்ளனவே உடம்புகள்` என்பதும், `அதனால், வினைக்கீடாக ஆண் உடம்பில் புகுந்திருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய்ப் பெண் உடம்பில் புகுதலும், பெண் உடம்பில் இருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய் ஆண் உடம்பில் புகுதலும் கூடும்` என்பது விளங்கும். விளங்கவே, இதனை உணராத மதங்கள், ஆணுக்கன்றிப் பெண்ணுக்கு வீடுபேறில்லை என்றும், `ஆணைவிடப் பெண்ணுக்கு இறைதொடர்பு எளிதும் மிக்கதுமாம்` என்றும் கூறுவன எல்லாம் போலியாதல் பெறப்படும். இம்மந்திரம் சொற்பொருட்வருநிலையணி பெற்றது.
இதனால், `பதியை அடைதற்குப் பசு - ஆண், பெண் - என்னும் வேறுபாடின்றி நின்மலாவத்தையை அடையமுயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage