
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி
பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து)
அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.
English Meaning:
In Turiya is bliss ExceedingLike being born, living, and dying
Are the experiences three
Of Waking, Dreaming and Deep Sleep States;
When Jiva reaches Turiya State,
And there abides,
Exceeding Pure he becomes,
And infinite bliss he enjoys.
Tamil Meaning:
அறிவு உதயசூரியன் போலத் தோன்றி விளங் குதலும், அவ்வாறின்றி மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல மழுங்கி நிற்றலும், அத்தமித்த சூரியன்போல ஒடுங்கி யிருத்தலும் ஆகிய இவையே பெத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன துரியங்களாகும். ஆகவே, `அவற்றின்பின் நிகழும் துரியமும் அறிவுசெயற்படாது அடங்கிக் கிடக்கும் நிலை` என்பது சொல்ல வேண்டா. இந்தப் பெத்தநிலை அவத்தைகளை விடுத்துச் சுத்தநிலை அவத்தையை ஒருவன் எய்துவானாயின்` அவன் மிக நன்மையை அடைந்தவனாய், எல்லையில்லாத ஆனந்தத்தையுடையவனாவான்.Special Remark:
``உதயம்`` எனக் கூறிய சொற்குறிப்பால் இவ்வாறு பொருள் கொள்ளக்கிடந்தது. ``மூன்றின்`` என்பதில் `இன்` வேண்டா வழிச் சாரியை கதி - நிலை. பதிதல் - அழுந்துதல். `பற்றுக்களில் பதிதரும்` என்பது, பின்பு ``பற்றாத் துரியம்`` என்றதனால் விளங்கும். பற்றாத் துரியமும் யோக துரியமும், ஞான துரியமுமாம். `யோகா வத்தையை அடைந்தவன் ஞானாவத்தையையும், பின்பு பரா வத்தையையும் அடைதல் உறுதி` என்பது பற்றி ``அதிசுபனாய் அனந்தானந்தியாகும்`` என்றார். சுபன் - நன்மையை அடைந்தவன். அனந்தம் - முடிவில்லாதது. அனந்த + ஆனந்தி = அனந்தானந்தி. இது வடமொழிப்புணர்ச்சி.இதனால், மலாவத்தைகள் துன்பநிலையும், நின்மலாவத்தை இன்ப நிலையும் ஆதலைக் கூறும் முகத்தால், நின்மலாவத்தின் இன்றியமையாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage