
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாசபே தங்களும்
ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.
English Meaning:
Power of GraceThe toy whirl of leaves made
The fire wheel of torches made,
The billowy waves of the blue sea,
The curd that stands with the churn
—All these are by some other force moved;
So too, the Jiva pushed by Malas,
Enter hell, heaven and earth
And stand sore troubled;
—All these away vanished
When Grace does descend.
Tamil Meaning:
`ஆன்மாவே சிவம்` என்று சொல்லத்தக்க நிலையை ஆன்மா அடைந்தபின், அநாதியே பொருந்திய சகசமலமாகிய ஆணவமும், அதனை முன்னிட்டு வந்த, `மாயை` கன்மம், மாயேயம், திரோதாயி, என்னும் பாசவேறுபாடுகளும் அவற்றிற்கு உரியவாய் ஆன்மாவினிடத்து விளங்கிய இழிகுணங் களும், இவை நீங்கினாலும் நீங்கப் பெற்ற சுத்தான்மா விடத்திலும் பின்னும் நிற்கின்ற இவற்றின் வாசனைகளும் சூரியன்முன் சந்திரன் போல அடங்கி ஒடுங்கிவிடும். (வாதிக்கமாட்டா` என்றபடி).Special Remark:
மலங்களின் இழிகுணங்களை இருபாஇருபஃது நான்காம் செய்யுளால் அறிக. ஆன்மாச் சிவமாம் தன்மையை அடைதல் நின்மலாவத்தையில் ஆதலின், `அதனை அடைக` என்பார், இவ்வாறு அதன் பயனை விரித்தார். இதனானே `நின்மலாவத்தை` என்னும் பெயர்க்காரணமும் விளங்கிற்று.இதனால், நின்மலாவத்தை அதன்பெயருக்கேற்ற பயனை உடைத்தாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage