
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
எய்தின செய்யும் இருஞான சத்தியின்
எய்தின செய்யும் இருஞால சத்தியின்
எய்தின செய்யும் இறையருள் தானே.
English Meaning:
All Acts Are of Lord`s GraceThey who are caught
By forces of Maya twine (Pure and Impure)
Do things according;
They who are caught
By forces of Jnana
Act appropriate;
They who are caught
By forces of world desires
Behave that way;
—All these they do
Are acts of Lord`s Grace.
Tamil Meaning:
ஏற்புடைய செயல்களை ஏற்குமாற்றால் செய்யும் இறைவனுடைய கருணை பரிக்கிரக சத்தியாகிய `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளின் ஆற்றலைக் கொண்டும், `மந்தம, தீவிரம்` என்னும் இருவகை அருட் சத்தியைக் கொண்டும், கன்மத்தின் வழியாக, `இன்பம், துன்பம்` என்னும் இரண்டை ஊட்டுகின்ற திரோ தான சத்தியைக் கொண்டும் அவ்வப்பொழுது ஏற்புடையவற்றைச் செய்யும்.Special Remark:
`எய்தினர்` என்பது பாடம் ஆகாமை அது பற்றி யெழுந்த உரைகளானேவிளங்கும். எய்தின - ஏற்புடையன. `எய்தின செய்யும்` என்பது, சொற்பொருட் பின்வருநிலை அணியாய்ப் பலமுறை வந்தது. ``செய்யும்`` நான்கில் ஈற்றில் உள்ளது எச்சம். ஏனையவை முற்று. இதனையும் முற்றாகக் கொள்ளின் இறையருள் எவ்வாற்றானும் ஏற்புடையனவே செய்யும்` என முடிக்க. இப் பொருட்டு ``இறையருள்`` என்பது மட்டுமே முதலிற் கூட்டத்தக்கது. அருள்காரணமாக இறைவன் செய்வனவற்றை அருளே செய்வன போலக் கூறினார். `பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து` என்றாற்போல. ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. தான், அசைகள். ஞால சத்தி - ஞாலத்தை நடத்தும் சத்தி. ஞானசத்தி, ஞாலசத்தி இரண்டும் தாதான்மியமாய் உள்ள ஒரு சத்தியின் வகையேயாம். மந்ததரம் மந்தத்திலும், தீவிரதரம் தீவிதத்திலும் அடக்கி இரண்டாகக் கூறப்பட்டன.இதனால், முன் மந்திரத்தில், ``ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே`` எனக் கூறியது இவ்வாற்றால் என விளக்கு முகத்தால் வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage