
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.
English Meaning:
Merge in Silence, Senses WithdrawnDeep in the Well of Silence (Mauna)
Is a turtle—Jiva—(with Malas Five withdrawn)
If from Truth you deviate not,
And in (It) merge entire,
You shall indeed live
A thousand years beyond the turtle.
Tamil Meaning:
[இம்மந்திரம் ஒட்டணி பெற்றது.]ஊமைக் கிணறு - வாய் இல்லாத கிணறு. அஃதாவது, தோண்டப்படாமல் நிலத்தினுள்ளே கிடக்கின்ற நீர்நிலை. என்றது கேவல நிலையை. ஆமை, கேவலத்தில் கிடக்கும் ஆன்மா. அழுவை - அழுவம்; பள்ளம். பள்ளங்கள் ஐந்தாவன, கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் யோகம், சகலத்தில்ஞானம்` என்னும் காரண அவத்தைகள், அவற்றுள், `வாய்மை` என்னும் பள்ளம் சகலத்தில் ஞானம். இதுவே நின்மலாவத்தை. இதனை அடைந்த ஆன்மா நித்தியமாம் தன்மையைப் பெறும்.
Special Remark:
ஆன்மா எப்பொழுதும் நித்தியமேயாயினும் உடம்போடு கூடிப் பிறந்தும், இறந்தும் வருதலால் அநித்தியமாக எண்ணப்படுகின்றது. ஆகவே, `மென்மேலும் ஓர் ஆயிரத்தாண்டு` என்றது. `என்றும் இறவாமையை உடையதாம்` எனப்பொருள் தந்து, நித்தியம் ஆதலை உணர்த்திற்று.இதனால், `நின்மலாவத்தை பராவத்தைக்கு வாயிலாய் நிற்கும்` என அதனது சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage