
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.
English Meaning:
Seek Siva Within the SelfThe Great souls that realize Siva
That is Self within,
Will seek forth Siva in the Self;
They who do not reach Siva in the Self,
Will reach Siva never.
Tamil Meaning:
(`என்னை உடையானாகிய தலைவன் எங்குளன்` எனப்புறத்தே பலவிடத்துத் ``தேடியும் தேடொணாத் தேவனாய்`` உள்ள சிவனை, `இனி என்னுள்ளேதான் நான்தேட வேண்டும்` என உணர்ந்து, அவ்வாறே) அவனைத் தன்னுள்ளே அறிய முயல்கின்ற பெருமகன் அம்முயற்சியில் உறைத்து நிற்பனாயின், அவனைத்தான் அடைந்துவிடுவான். அம்முறையில் அவன் தன்னுள்ளே தேட முயலாது, புறத்திற்றானே தேடிக் கொண்டிருப்பானாயின், அவன் சிவனைத் தன்னுள்ளேயும் அடைதற்கு அறியவனாகியேயிருப்பான்.Special Remark:
`சிவனைப் புறத்தே தேடாது தன்னுள்ளே தேடி அடைவதுதான் நின்மலாவத்தை` என்பது குறிப்பு.``தேடிக் கண்டுகொண்டேன்;திர மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்``* என நாவரசர் அருளிச்செய்தமையை இங்கு உன்னி உணர்க. மற்றும் அவர் இத்திருமந்திரத்தை ``முன்னோர் மொழி பொருளேயன்றி, அவர்மொழியும் - பொன்னேபோல்போற்றும்`` வகையில் (நன்னூற் பாயிர உரைமேற்கோள்) தமது `சித்தத் தொகை`த் திருக்குறுந்தொகையில் எடுத்தருளிச் செய்தமையும் உணரற்பாற்று. இதனானே, உண்மைப் பாடங்களும் சில விளங்கும். யாப்புக்கேற்பன கொள்ளப்படும். எனவே முன்பு, ``தேடிக் கண்டுகொண்டேன்`` என்னும் திருப்பாடலும் இதனையே இனிது விளக்கியதாயிற்று. ``தன்னினில்`` என்பவற்றில் இன்னுருவோடு ஒத்த இல்லுருபு இன் சாரியை பெறுதல் சிறுபான்மை இலேசினால் கொள்ளப்படும்.l உம்மையை மாற்றிவைத்துரைக்க.
இதனால், நின்மலாவத்தையே சிவனை அடையும் வழியாதல் வயியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage