
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே
தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.
English Meaning:
Master Tattva-Knowledge and Attain God-KnowledgeOnly for them who master
The knowledge of Tattvas, (Tattva-Jnana)
Will the Higher Knowledge (God-Knowledge) be;
In that Higher Knowledge,
The Self with Siva one becomes;
Then has begun the Bliss of God-Knowledge.
Tamil Meaning:
மாயாகாரியங்களாகிய கருவிகளின் உண்மையை உணர்ந்தவர்கட்கே மெய்ப்பொருளாகிய சிவத்தை உணரும் உணர்வு கிடைக்கும். அந்த உணர்வானே ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும். அதனை அடையவே, அந்தச் சிவஞானமே சிவபத்தி -யாய்ப் பரிணமிக்க, அந்தப் பத்தியால் சிவானந்தம் விளைவதாகும்.Special Remark:
``தத்துவம்`` நான்கில் முதலது உபசார வழக்கால் `தத்துவம்` எனப் பெயர்பெற்றது நிற்கும் மாயா கருவிகளைக் குறித்தது. ஏனையவை உண்மை வழக்கால் மெய்ப்பொருளைக் குறித்தன. ``தலைப்படல்`` இரண்டனுள் முதலது ஆன்மாவின் செயலாயும், இரண்டாவது ஞானத்தின் செயலாயும் நின்றன. தான் - ஆன்மா. அவன் - சீவன். ``ஆகவே`` என்ற அனுவாதத்தால், ஆதல் தானே பெறப்பட்டது. ஈற்றில் உள்ள தான், அசை.இதனால், முன் மந்திரத்தில் `ஆன்மாத் தன்னை யுணர்தல் சிவஞானத்தால்` என்றமை பற்றி, அந்தச் சிவஞானம் கிடைக்குமாறும், அது கிடைப்பின் விளையும் பெரும் பயன்களும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage