
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
பதிகங்கள்

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.
English Meaning:
In Actionless Contemplation Divine Message ComesTo be actionless is Siva`s bliss;
They who are actionless
Seek not Siva Yoga;
They who are actionless
Will not in world merge;
Only to them who are actionless
Is the Divine message to be.
Tamil Meaning:
நின்மல துரியத்தை அடைந்தவர்கட்கே, அதன் பின்னர் ஆனந்த நிலையாகிய அதீத நிலை வாய்க்கும். அதனால் அவர் அந்த அதீத நிலையை அடையமுயலுதலன்றி, முன் சொன்ன சிவ யோகத்தைப் புரிய எண்ணமாட்டார்கள். அவ்யோகத்தைப் புரியாமை -யால், அவர்கள் உலகப்பற்றில் வீழ்ந்துவிடமாட்டார்கள். ஆகவே, சிவானுபவமாகிய செயல் ஞான துரியாதீதத்தை அடைந்தவர்கட் கல்லது. ஏனைச் சிவயோகிகட்கு உண்டாகமாட்டாது.Special Remark:
ஆன்மா, ``தான்பணியைநீத்தல்``l நின்மல துரியத்திலேயாதலை அறிக. ஆன்மாச் செயலற்றிருத்தலாகிய இதனையே நாயனார் முதல் தந்திரத்து `உபதேசப்` பகுதி 15.16,17 ஆம் மந்திரங்களில் நயம்பட விளக்கியிருத்தல் காண்க.இதனால், ஒன்று இடையிட்டு மேற்கூறிய சிவயோகம் நின்மலா வத்தைக்குச் சாதனமேயன்றிச் சாத்தியம் ஆகாமை உணர்த்தப் பட்டது.
ஆன்மா தன் செயல் அற்று, `எல்லாம் சிவன் செயல்` என்று இருக்கும் நின்மல துரிய நிலையே
``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்`` (திருவுந்தியார் - 30)
எனவும்
``செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோ! நாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு``l
எனவும் சாத்திரங்கள் கூறுகின்றன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage