
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறி வாகான்
அறியாத வற்றை அறிவானைக் கூட்டி
அறியா தறிவானை யாரறி வாரே.
English Meaning:
Lord is the Knower; He makes the Jiva Experience the Five States of AwarenessThe knower he is,
Who things unknown knows;
The knower,
Who the Self knows not,
Is knower none;
The Jiva the Five Avastas knows not;
He; Lord, makes him know
To none beknown;
Who indeed does Him know?
Tamil Meaning:
அறிவில்லாத சடங்களாகிய பாசங்களை அப்பாச அறிவினால் அறிகின்ற ஆன்மா அந்தப் பாச அறிவைக் கொண்டு அறியவாராத பதி, அப்பாசங்களின் நீங்கியவழியும் பசு அறிவாலும் அறியவாரான். ஆகவே, அறிவில்லாத சடங்களாகிய பாசங்களையும், அறிவுடைய சித்தாகிய ஆன்மாவையும் ஒன்று கூட்டி அவற்றின் செயற்பாடுகளை அறியாதறிபவனாகிய பதியை அறியவல்லார் யாவர்? (ஒருவரும் இல்லை.)Special Remark:
`பாச ஞான பசு ஞானங்களின் நீங்கிப் பதி ஞானங் கண்ணாகக் காண்பவர்களே பதியை அறிவார்கள்; அத்தகையோர் உலகில் மிக அரியர்` என்பது கருத்து. `தன்` என்றது `பசுவை, `தன்னறி விற்கும் ஆகான்` என உருபும் உம்மையும், அறியாதவற்றையும் அறிவானையும் கூட்டி என உம்மையும் விரிக்க. `அறியாதறிதலாவது, சுட்டியறியாது, பொதுவாக அறிதல். `கீழாலவத்தை மத்தியா லவத்தை களில் பாச அறிவும், மேலாலவத்தையில் பசு அறிவும் செயற்படுதலால் அவைகளில் பதி வெளிநில்லாது, நின்மலாவத்தையில் மட்டுமே வெளிநிற்பான்` என்பதையே இம் மந்திரத்தாற் கூறினார்.இதனால், அவத்தைகளில் பதி நிற்குமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage