
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்திஆம்
எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை
ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.
English Meaning:
Tattvas in the Inner Divisions of Turiya StateThirty and Six are Tattvas
In Jagra-in-Turiya;
In Svapna in that Turiya;
And in Sushupti-in-Turiya
In Turiya-in-Turiya
The Body Gross and the Body Subtle
To the Suddha Maya belong;
He who that Turiya-in-Turiya State attains
Master, indeed, Becomes.
Tamil Meaning:
சகலசாக்கிரத்தில் முப்பத்தாறு கருவிகளும் குறைவின்றிச் செயற்படும். அந்தச் சாக்கிரத்திற்குப் பின்னர் அதிலே, `சொப்பனம், சுழுத்தி` என்பவையும் நிகழும். அவைகளில் இளைத்து மடங்கும் கருவிகள் அசுத்த மாயையின் காரியங்களாம். அவை காலம், நியதி முதலியன. அவை செயற்படுதல் சிவதத்துவங்கள் செலுத்துதலினாலேயாகலின், `அவை செயற்படா. எனவே, சிவ தத்துவங்களும்செயற்படாமை பெறப்பட்டது. சிவதத்துவங்கள் ஐந்தில் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி என்பவை முறையே ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே போவதால், சகலத்தில் சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவை நிகழும் என்க.`உளனோ, இலனோ` - என்னும் ஐயம் நிகழுமாறு உயிர்ப்பின்றிக் கிடப்பது, அதற்குமுன் துரியநிலையில் இருந்த அந்த ஆன்மாவேயாம். (எனவே, விழிப்பு நிலையிலே உயிர்ப்பின்றி மூர்ச்சித்துக் கிடத்தலே சகலத்தில் துரியாதீத மாயிற்று.)
Special Remark:
இவையெல்லாம் மத்தியாலவத்தைகள், எய் பகுதி - வினைத்தொகை. எய்த்தல் - இளைத்தல். பகுதி - தொகுதியுள் சில கூறுகள். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். `முந்த ஆனவன்` என்பதில் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. `உந்த ஆனவன்` என்றலும் ஆம். இங்கும் துரியம் `சூக்கம்` எனப்பட்டது.இம்மந்திரத்திற்குச் சித்தாந்ததத்துள் ஓரிடத்தும் பெறப்படாது அவரவர் கருதியவாறே உரைத்த உரைகள் உள.
இதனால், வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் கூடுதல் குறைதல்களாலே மத்தியாலவத்தைகள் நிகழ்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage