
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.
English Meaning:
Jiva Ascends These evolutes to Reach ParaparamThe luminous Siva, Sakti and Sadasivam,
The Maheswara, the Pure Vidya, and Ragas,
Kalas, Time (Kala), Knowledge (Bodha), Niyati, and Mahamaya
The Purusha (soul),
Together these twelve
(Are for the Jiva to ascend.
Tamil Meaning:
(மேற்கூறிய இருவகைத் தத்துவங்களையும் கூட்டித் தொகை காணின்) `சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை, கலை, காலம், நியதி, வித்தை, அராகம், புருடன், மாயை` - எனப் பன்னிரண்டாம். இவற்றுள் `புருடன்` என்பது ஏனையபோல ஒரு தத்துவம் அன்று. கலை முதலிய ஐந்தனோடும் கூடி நிற்கும் ஆன்மாவே.Special Remark:
இங்ஙனம் தொகையை வேறு மந்திரத்தில் வைத்துக் கூறியதற்குப் பயன், `புருடன்` என ஒரு தத்துவத்தைக் கூட்டியதும், அது பற்றிய விளக்கத்தைத் தந்ததும் ஆகும். ஆதி - முதல். என்றது, `தத்துவம்` என்றபடி. செய்யுள் நோக்கி வித்தியாதத்துவங்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. சைவத்தின் சிறப்புத் தத்துவங்களை மட்டுமே கூறினார், ஆன்ம தத்துவங்கள் பிறராலும் கொள்ளப்பட்டு, விளங்கிக் கிடத்தல் பற்றி.இதனால், மேற்கூறப்பட்ட தத்துவங்கட்குத் தொகை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage