
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா
ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.
English Meaning:
Tattvas Acting in Waking, Dream and Deep Sleep StatesIn the Waking State within the Turiyatita State
Are Tattvas, five times five leave;
Out of six times six tattvas in all
When six out of Tattvas in Waking State leave,
Then is Dream State in Turiyatita Waking;
When further beyond the five Tattvas leave,
Then ensues Sushupti in Turiyatita
Where Maya alone functions.
Tamil Meaning:
தத்துவம் முப்பத்தாறில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியா தத்துவத்தில் புருடன் ஒன்றும் ஆக இருபத்தைந்து தத்துவங்களை ஆன்மாத் தன்னின் வேறாகக் கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சாக்கிரமாகும்.பின்னர், வித்தியா தத்துவத்தில் எஞ்சியுள்ள ஆறு தத்துவங் களையும் அவ்வாறு கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சொப்பனமாகும்.
பின்னர், சிவ தத்துவம் ஐந்தனையும், `இவை பிரளயாகலர் சகலர்கட்கு பிரேரக மாத்திரையாயும், விஞ்ஞானகலருக்குத் தனு கரண புவன போகங்களாயும் பயன்பட்டுத் தோற்றமும் அழிவும் உடைய அநித்தியப் பொருள்களேயன்றி, இவை தாமே சிவனது இலய போக அதிகாரத் திருமேனிகளாகிய நித்தியப் பொருள்கள் அல்ல; அத் திரு மேனிகள் இவற்றின் வேறாய்ச் சத்தி வடிவாவனவே` எனத் தெளிந்து, அவை பற்றியிருந்த மயக்கத்தின் நீங்குதலே சகலத்தில் சுத்த சுழுத்தி யாகும். இவற்றிற்குப் பின் எஞ்சி நிற்பது காரண நிலையில் உள்ள சுத்த மாயையே,
Special Remark:
`சிவ தத்துவங்கள் பிரேரக காண்டம்` - என்பதை நோக்காதார், `அவை யின்றியும் வித்தியா தத்துவங்கள் நீங்கிய வழியும் சிவதத்துவங்கள் தொழிற்படும்` எனவும் இம்மந்திரத்திற்குப் பொருள் உரைப்பர்.மலாவத்தைகட்கே தத்துவங்களின் தொழிற்பாடும், அவை யின்மையும் காரணமாவதன்றி, நின்மலாவத்தைக்கு அவை காரணம் ஆகாமையையும், `நின்மலாவத்தை திருவருளானே நிகழ்வன` என்பதையும் அவர் நோக்கிலர்.
சகலத்தில் சுத்த சாக்கிரம் முதலியனவும் சகலத்தில் சகல சாக்கிரம் முதலியனபோல இலாடத் தானத்தே நிகழ்தல் பற்றி இவற்றையும் `சாக்கிர சாக்கிரம் முதலியனவாகக் கூறுவர். எனினும் இடம் நோக்கி `அவை இவை` எனக் கொள்ளப்படும்.
இம் மந்திரத்துட் கூறப்பட்டன நின்மலாவத்தைகளே.
இதனால், `நின்மலாவத்தைகளாவன இவை` - என்பதை வகுத்துக் கூறத் தொடங்கி, முதல் மூன்றின் இயல்புகள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage