
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டமறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாத காணல்
அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.
English Meaning:
Four Inner States of the Dream StateTo vision in dream
As in Jagrat,
Is Jagrat-in-Dream State;
To vision and forget
In Dream
Is Dream-in-Dream State,
To vision and non-vision
Is Sushupti-in-Dream State
To infer events
Is Turiya in Dream State.
Tamil Meaning:
(மேல், `நனவிற் கனவில்லை` என வந்த மந்திரத்தில் சித்தாந்தம் கூறிய நாயனார். இது முதல் மூன்று மந்திரங்களால் சில பூர்வ பக்கம் கூறுகின்றார்.)கனவு நனவுபோல மிகத் தெளிவாக நிகழ்தல் சொப்பனத்தில் சாக்கிரம். (இதுவே, `சொப்பனத்தில் சொப்பனம்` என்பது சித்தாந்தம்.)
கனவு தெளிவாக அன்றி, மந்தமாக நிகழ்தல் சொப்பனத்தில் சொப்பனம். (இது வேறன்று என்பது சித்தாந்தம்.)
கனவில் காட்சியாகக் காணாது, கருத்தாக மட்டும் சிலவற்றை உணர்தல் சொப்பனத்தில் சுழுத்தி. அந்த உணர்வும் இன்றி இருத்தல் சொப்பனத்தில் துரியம் (இதனானே, `உணர்வு கனவில் உண்டாகும் இன்பத்துன்பங்களிலே அது அதுவாக அழுந்துதலே சொப்பனத்தில் துரியாதீதம்` - என்பது பெறப்படும்.)
Special Remark:
`கனவில் நனவில்லை` என்பதே சித்தாந்தம். `கண்ட, காணாத` என்பன அஃறிணை பன்மை வினைப் பெயர்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage