
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.
English Meaning:
Turiyatita State Experiences no DreamIn the Waking State of Turiyatita that is fifth
No dream the Subtle body sees;
In the Sushupti State there,
The Self Experiences its own
In the Turiya state there
Is born the Turiyatita per sa.
Tamil Meaning:
நனவில் கனவு இல்லாமைபோலக் கனவிலும் நனவு இல்லையாதலின், சுழுத்தியில், சுழுத்தி முதலிய மூன்று நுட்ப அவத் -தைகள் மட்டுமே உள்ளனவாம். (அவைகளை `சுழுத்தியிற் சுழுத்தி, சுழுத்தியில் துரியம், சுழுத்தியில் துரியா தீதம்` எனக் கூறிக் காண்க.)இங்ஙனம் கூறியதனானே, சொப்பனத்தில் சாக்கிரம் ஒழிந்த நான்கும் உளவாதல் பெறப்பட்டது.
நனவில் சொல்லப்படும் துரியமும், துரியாதீதமும் தாமே தனித்து நிகழும் நிலையில் துரியத்தில் இரண்டும், துரியாதீதத்தில் அஃது ஒன்றுமாகவே நிகழும். (அவை, `துரியத்தில் துரியம்` துரியத்தில் துரியாதீதம்` எனவும், `துரியாதீதத்தில் துரியாதீதம், எனவும் சொல்லப்படும்.)
``ஐந்துசாக்கிரத்தில்; நான்கு கனவினில்`` என்னும் சிவஞான சித்திச் செய்யுளுக்கு இதுவும் பொருளாமாறு அறிந்து கொள்க.
Special Remark:
`இதனுட் கூறியன யாவும் கீழாலவத்தை` என்க.பகுதி - மூலப்பகுதி. தற்கூட்டு மாயை - கீழாலவத்தையில் ஆன்மாவிற்குக் கூட்டப்படும் மாயை. `அது மூலப்பகுதியே` என்ற படி. `வந்தவழி` என்பது `வந்து` எனத்திரிந்தது. வந்தவழித் தாமே உளவாம் என்க. மூன்றாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. முதற் கண் ``நனவிற் கனவில்லை`` என்றது `கனவில் நனவு இல்லை` என்பதனைத் தெளிவிக்கக் கூறிய உவமை.
இதனால், கீழாலவத்தை பற்றிய சில நுட்பங்கள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage