
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.
English Meaning:
Sushupti and Its Inner DivisionsJagrat-in-Sushupti
Is to vision it as non-vision;
Dream-in-Sushupti
Is to know it as dream;
Sushupti-in-Sushupti
Is to know that there is no knowledge of it;
Turiya in Sushupti
Is inexplicable Void.
Tamil Meaning:
சுழுத்தியில் ஒருகால், `இது நல்ல உறக்கம்` என அதனை உணர்தல் சுழுத்தியில் சாக்கிரம். சுழுத்தியில் `நாம் நன்கு உறங்குகின்றோம்` எனத் தன்னை உணர்தல் சுழுத்தியில் சொப்பனம். (இவை இரண்டும் நிகழில் சுழுத்தி யில்லையாம் என்பது சித்தாந்தம்.)Special Remark:
சுழுத்தியை உணர எழுகின்ற அறிவைச் சுழுத்தியில் தோய் கின்ற அறிவு அழிக்க, யாதும் தோன்றாதநிலை சுழுத்தியில் சுழுத்தி, அவ் எழுச்சியும், அழிப்பும், தோன்றாது அடங்கும் நிலை சுழுத்தியில் துரியம். (இதனானே, `அவ்வடக்கத்தால் எழுகின்ற உறக்க இன்பத்தில் ஆழ்ந்துவிடுதல் சுழுத்தியில் துரியாதீத நிலை` என்பது பெறப்படும்).Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage