
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின்
பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.
English Meaning:
Lord is the Cow-Herd (Pasupati); Jiva the Cow (Pasu)Many the color of cows,
But one the color of milk;
And of peerless hue
Is Lord, the cowherd;
When the cowherd
Who tends the cows
His guiding staff shows,
The cows will not their Master leave.
Tamil Meaning:
உலகில் பாலைத் தரும் பசுக்கள்யாவும் ஒரே நிறம் உடையன அல்ல; பல நிறம் உடையன. (அது போல, சீவர்களாகிய பசுக்களும், `பசுத்துவம்` எனப்படும் பந்தத்தைத் ஒரே வகையாக உடையன அல்ல; ஒரே வகையை உடையனவாயின், பந்தத்தினின்றும் விடுபடுதலும் எல்லாப் பசுக்களுக்கும் ஒரு காலத்திலே நிகழ்தல் வேண்டும். அவ்வாறில்லாமையால், பந்த வேறுபாடு பலதிறப் பட்ட தாம்.) ஆயினும், பசுக்கள் தரும் பயனாகிய பால் ஒரு நிறமேயாம். (அது போல அவை அடையும் வீடுபேறு ஒருதன்மையுடையதே.) இனிப் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவன். (ஆகவே, அவன் ஒரு தன்மையனேயன்றிப் பல தன்மை உடையவன் அல்லன். (அதுபோலச் சீவர்களை, `பெத்தம், முத்தி` என்னும் இரு நிலைகளிலும் உடன்நின்று நடாத்தும் பதி ஒருவனே, ஆகையால் அவன் பதித்தன்மை ஒன்றே உடையனன்றிப் பசுக்கள் போலச் சார்த்ததன் வண்ணமாய்த் தன்மை வேறுபடுபவனல்லன்.)ஆயன் பசுக்களை மேய்க்காமல் அவற்றின் இச்சைப்படி விட்டு விடுவானேயானால் இவை ஆயனைச் சென்று சேராமல், காட்டில் திரிந்து அல்லற்பட்டே ஒழியும். (அதுபோல, சிவன் சீவர்களைக் கண் ணெடுத்துப் பார்க்காமல் விட்டுவிடுவானேயானால், அவை அவனை அறிந்து இன்புற மாட்டா, பந்தத்தால் விளையும் துன்பத்தில் கிடக்கும்.
``மேய்ப்பாரும் உண்டாய், வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே``
எனப் பின்னரும் பசுக்களுக்கு மேய்ப்பான் இருத்தல் இன்றியமையாது எனக் கூறுவார்.)
Special Remark:
இம்மந்திரம் ஒட்டணி பெற்று நின்றது. `பசுக்கள் தலை வனைப் பற்றி விடாவே` எனப் பாடம் ஓதுபவர்கள்; `சிவனது அருள் இன்றியே சீவர்கள் சிவனை அடைய இயலும் எனக் கூறுவோராவர்.`பசுக்கள் கொட்டிலை அடைந்த பின்பும் ஆயன் அவைகளைப் புறக்கணித்துவிட்டு விட்டொழிவான் அல்லன்` என்பதையும் நோக்குக. இதனால், `மேய்க்கும் கோல்` என்பது திரோதான சத்திமட்டும் அன்று; அருட்சத்தியுந்தான் - என்க.
பால் பிறர்க்கு மட்டுமே பயன் படுவன அல்ல. கன்றுகளின் நலத்தில் கருத்துடைமையால், அக்கன்றுகளை வளர்த்தல் பசுக்கள் அடைகின்ற பயனேயாம். மேலும் வறட்சுப் பசுக்கள் போற்றப் படாமல், மிக்க பாலைத் தரும் பசுக்களே போற்றப்படும். அதனால் பால் அதனைத் தரும்பசுக்கள் அடையும் பயனுமாகும். ஆகவே அது சீவன்கள் அடையும் வீடுபேற்றிற்கு உவமையாதற்கு இழுக்கில்லை.
இதனால், `மேற்கூறப்பட்ட மலங்கள் உயிர்தோறும் வேறு வேறு வகையாய் உள்ளன` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage