
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

அறிவறி கின்ற அறிவு நனவாம்
அறிவறி யாமை அடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாயின தான துரியமே.
English Meaning:
Jiva-knowledge in Relation to Para-Knowledge in the Four StatesJiva-knowledge cognising Para-knowledge is Jagrat
Jiva-knowledge cognising-ceasing is Dream;
Jiva-knowledge cognising,
Yet knowing it not, it Sushupti;
Jiva-knowledge merging in Para-Knowledge
Is Turiya verily.
Tamil Meaning:
ஆன்மாத் தத்துவங்களின் இயல்பை அறியுமுகத் தானே தன்னியல்பை அனுமித்தறியும் நிலை சகலத்தில் சுத்த சாக்கிரம். (இதனை, `ஆன்மரூபம்` என்க.) தத்துவங்களின் இயல்பை உணரும் முகத்தால் அவற்றால் தனக்கு உண்டாகும் பாச அறிவை நீக்கி நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சொப்பனம். (இதனை, `தத்துவ சுத்தி` என்க.) பாச அறிவை நீக்கிய ஆன்மாப் பதியறிவை நாடி அது தோன்றாது நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சுழுத்தி. (இதனை, `ஆன்ம தரிசனம்` என்க. `சிவரூபம்` இங்கு உடன் நிகழும்.) பதியறிவை நாடி அதனை அறிந்த ஆன்மா, அந்த அறிவில் தனது அறிவு ஒடுங்கத் தான் தோன்றாது அது வேயாய் நிற்கும் நிலை சகலத்தில் சுத்த துரியமாம். (இதுவே, ஆன்ம சுத்தியும், சிவதரிசனமும், சிவயோக மும் என்க.) இதற்கு மேல் ஆன்மாத் தன்னால் பற்றப்பட்ட சிவம் விளைக்கின்ற ஆனந்தத்தில் மூழ்கிப் பிறிதொன்றையும் அறியாது நிற்றலே சகலத்தில் சுத்த துரியாதீதம் என்பது குறிப்பால் கொள்ளக்கிடந்தது. அதுவே `ஆன்ம லாபம்` என்க.Special Remark:
ஆன்ம சுத்தி, சிவ தரிசனம், சிவயோகம் இவை உடன் நிகழ்ச்சியாய் நிகழ்தல் பற்றி அம்மூன்றையும் ஒன்று கூட்டிச் சுழுத்தி துரியங்களாகப் பகுத்துக் காட்டினார். இவற்றிற்கு முன் இரண்டை, `சொப்பனம்` என ஒன்றாகக் காட்டினார்.மேல், `ஆறாறில் ஐயைந்து` எனவும், `மாயையில் வந்த புருடன்` எனவும் போந்த மந்திரங்களை இங்கு உடன்வைத்துக் காண்க. மூன்றாம் அடியில் வகரமெய் விரித்தல் `அறிவையறிதலால் வரும் அறியாமை சுழுத்தி` என்க.
இதனால், நின்மலாவத்தையில் சில உட்கூறுகள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage