
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச்
சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால்
ஆய தனுவின் பயன்இல்லை யாமே.
English Meaning:
In Turiya Maya Leaves and Jiva Merges in BinduThe Purusha (Experient Soul) of Sushupti
When it reaches Turiya State next
The Maya too leaves,
And one with Kevala (Primordial) Bindu becomes;
Then no more the body its use has.
Tamil Meaning:
(முன்னை மந்திரத்திற் கூறியவாறு) உயிர் மாயா காரியங்களையெல்லாம் கடந்து எஞ்சி நின்ற காரண நிலையில் உள்ள சுத்த மாயை தாரகமாகச் சிவத்தை உணர்ந்து நிற்றலே சகல சாக்கிரத்தில் சுத்த துரியமாகும்.பின்னர் ஆன்மா அந்த நிலையிலும் நில்லாமல் விட்டு நீங்கி, அந்தக் காரணமாயையும் தொடர்பின்றி நிற்கச் சிவமே தாரகமாக அதனை உணர்ந்து நிற்றல் சகல சாக்கிரத்தில் சுத்த துரியாதீதமாகும். இந்நிலையில் உடம்பு இருந்தும் இல்லாததேயாம்.
Special Remark:
`உடம்பு வழியாக மலவாசனைகள் உயிரைத் தாக்கா` என்பதாம். `மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை` என்றாரேனும், `புருடன் மாயையில் வந்ததே துரியத்தில் ஆயமுறை` என்றலே கருத்தென்க. சேய்மை, `சேய்` எனமுதனிலை மாத்திரமாய் நின்றது. `சேய்மை` என்றது `அதீதம்` என்றவாறு. கேவலம் - தனிமை; கட்டற்ற நிலை. `விந்துவும் தன்னைவிட்டுச் செல்ல, உயிர் தான் சிவத்தில் சென்றக்கால், சேய்மைத்தாகிய கேவலமாம்` என்க.இதனால், முன்னை மந்திரத்திற் கூறியவைபோக, எஞ்சி நின்ற இரண்டன் இயல்புகள் கூறப்பட்டன. இவை ஐந்தும் தச காரியத்துள் முதல் மூன்றினை ஒன்று கூட்டிப் பகுத்தன என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage