
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

சத்தி யிராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறு பாச மலம்ஐந்தோ(டு) ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.
English Meaning:
Raison D`Etre of CreationIn endearment wondrous
The Lord moved Sakti into Creative activity;
And to primordial Pasas five,
Conjoined Tattvas thirty and six
And fashioned the body organs too,
—That your Malas sundered be.
Tamil Meaning:
சிவன், `இச்சை, ஞானம், கிரியை` என்னும் தனது மூன்று சத்திகளில், `உயிர்களை உய்விக்க வேண்டும்` என விரும்பும் இச்சா சத்தியினால் உயிர்களில் எல்லாம் தான் நல் உயிராய்க் கலந்து, அநாதியே உயிர்களில் தன்னைப் போலவே பொருந்தியுள்ள பாசம், `அஃது ஒன்றே` யாகாது `ஐந்து` என்னும் படி முதல் மலத்தொடு நான்கு மலங்களைக் கூட்டியதனானே அம்முதல் மலம் முற்றிலும் அற் றொழிதற் பொருட்டுத் தத்துவ வகை முப்பத்தாறினையும் உண்டாக்கி, அம்முப்பத்தாறின் கூறுகளாக மற்றும் அறுபத்தாறு கருவிகளையும் தோற்றுவிக்து வைத்தான்.Special Remark:
`இவ்வாற்றால் உயிர்கள் முதல் மலம் முற்றிலும் நீங்கச் சிவனையடைந்து பேரின்பத்தை யடையும்` என்பதாம். `ஈசன் இராக சத்தியின் தான் நல் உயிராகி, ஐந்தோடு, மலம் அறுமாறு பேதம், சமைத்து, கருவியும் வைத்தனன்` என இயைத்துக் கொள்க. இராகம் - இச்சை. `பாசத்தோடு` என உருபு விரிக்க.நன்மை, இயல்பாகவே பாசங்களின் நீங்கினமையால் அறிவேயாயும், இன்பமேயாயும் இருத்தல். `மலம் ஐந்து ஆக்கிய -தோடு` என்க. இவ் ஓடு, எண் ஓடு முதல் மலம் ஆணவம்; பின்னர்க் கூட்டிய நான்கு மலங்களாவன மாயை, கன்மம், மாயேயம், திரோ தாயி, மாயேயம், தத்துவ தாத்துவிகங்கள். எனவே, `தத்துவ பேதம், கருவி` என்றது மாயேயங்களை விளக்கியதாம். `கருவியும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
அவத்தை பேதங்கள் பெத்தமும், முத்தியுமாய் நிற்றலால், அவையிரண்டும் சிவன் செயலே யாதலை விளக்கியவாறு.
இம்மந்திரம் சைவ சித்தாந்தச் சுருக்கமாய் நிற்குமாற்றையும் உணர்ந்து கொள்க.
முன்னை மந்திரத்தில் தொகுத்துக கூறிய சிவனது செயல் இதனால், வகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage