
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச்
சென்று துரியாதீ தத்துச் சிலகாலம்
நின்று பரனாகி நின்மலன் ஆமே.
English Meaning:
Evolution of Jiva to Para StateThe Soul who thus stood
Has verily a Master become;
He enters the Turiya State
And remains in the Eight-fold Yoga;
He then attains Turiyatita State;
And further a while after
He becomes Para the Pure.
Tamil Meaning:
மேற்கூறிய சுழுத்தியில் அமைதியை உற்றுணர்ந் தவன், அஃது அறியாமையாகிய இருளால் விளையும் அமைதியே யாதலைத் தெரிந்து, அவ்விருள் நீங்கி, ஒளியில் விளையும் அமைதியை அடையவிரும்பி, ஆசானிடத்துச் சென்று அவன் உணர்த் தியவாறே, உலகியலிற்றானே இயம நியமாதிகளை மேற்கொள்ளும் யோகத்தில் பொருந்தி நின்று, அவ்யோகத்தில் துரியமாகிய தியானத் -தில் முதிர்ந்தவனாய், அதற்கு மேற்சென்று, அதன்கண் துரியாதீத மாகிய சமாதியில் சில காலம் நின்று, அதன் பின் பராவத்தையாகிய ஞானாவத்தைகளை அடைந்து, அதனால் பாசங்கள் முற்றிலும் நீங்கப் பெற்று முத்தனாவான்.Special Remark:
`நின்று, ஆகி` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளில் வந்தன. `ஆசான்` என்பதன் பின், `கீழ்` என்னும் பொருளில் வரும் கண்ணுருபு விரிக்க. `உலகின் நியமாதிகளுற்று` என்பதனை மேலே `நிகழ்` என்பதன்பின் கூட்டுக. `ஒன்றி` என்றது, `யோகத்தில் பயின்று` என்றபடி. நின்மலம், இங்குப் பரமுத்தி,இதனால், `கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் அன்றாடம் இயல்பாகவே பயின்று வருவோர், ஆசான் அருள்வழியில் முயன்று, முன்னர் மேலாலவத்தையில் பயின்றால், பின்னர் நின்மலாவத் -தையால் வீடு பெறலாம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage