
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக்
கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற
விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத்
தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.
English Meaning:
Lord is WithinHe is the Lord of Maya Land,
Where the Spheres Three within are;
He is the One whom I see within
And pine incessant for;
He is the Lotus that blooms in the cranium,
With its stalk stemming deep in my heart.
Tamil Meaning:
அண்டத்தில் `தீ, ஞாயிறு, திங்கள்` என்னும் மூன்று மண்டலங்களில் விளங்கும் முதல்வனைப் பிண்டத்திலே அம்மூன்று மண்டலங்களில் வைத்துக் கண்டு மேல் எழுதற்கு ஏதுவாய், உடம்பிற்குள்ளே மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக நாளத்தையும் உடையவாய், நன்கு மலர்ந்த தாமரை மலர்கள் உள்ளன.Special Remark:
`அவைகளில் அவனை அவ்வாறு கண்டு, மேற் போவதே யோகாவத்தை` என்பதாம். மாயம் - நிலையாமை; அஃது அதனையுடைய மாயா காரியத்தைக் குறித்தது. `நாடன்` என்றதனால், அக்காரியம் அண்டமாதல் விளங்கிற்று. `கழிகின்ற` என்னும் பெய ரெச்சத்தை, ஏதுப் பொருட்டாகிய `தாமரை` என்பதனோடு இயைக்க. `ஒன்றும்` என்பது, `கீழ்` என்பதனோடும் சென்று இயையும். `மேல்` என்றது உச்சித் தலையை. `கீழ்` என்றது மூலாதாரத்தை. `மேல், கீழ்` என்றதனானே, இடையில் உள்ளனவும் பெறப்படும். யோக முறையில் மூலாதார முதல் மூன்று ஆதாரங்கள் அக்கினி மண்டல மாகவும், மற்றை மூன்று ஆதாரங்கள் ஞாயிற்று மண்டலமாகவும், ஏழாந்தானம் திங்கள் மண்டலமாகவும் கொள்ளப்படும். `மூன்றினுள் உள்ள நாடன்` என்க.இதனால், `யோகாவத்தைகள் அண்டத்தில் காணும் சிவக் காட்சியைப் பிண்டத்தில் காண்பனவாம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage