
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்(து)
ஆன விதிமூலத் தான்அத்தில் அவ்விளக்(கு)
ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.
English Meaning:
Kundalini Yoga ExperienceAs one that kindles the lamp`s flame,
So do you,
The Lamp`s Flame in Muladhara kindle;
That Lamp in Muladhara lighted,
Encompassing the Sphere of Moon, glows.
Tamil Meaning:
ஓரிடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு மற்றை யிடங்களிலும் வியாபித்து நிற்றல் போல, மூலாதாரமாகிய இடத்தில் உள்ள அந்த விளக்கினை அதனை ஏற்ற வேண்டிய முறையை யறிந்து அவ்விடத்திற்றானே மேலே நிலாமண்டலங்காறும் உள்ள இடங் -களில் வியாபிக்கும்படி, இடையே அணைந்துவிடாதபடி எரியுங்கள்.Special Remark:
`எரித்தால், சிவபிரான் உங்கள் மனத்திலே வந்து மன்னியிருக்கப் பெறுவீர்கள்` என்பது குறிப்பெச்சம். ஆன விளக்கு - உலகில் ஓரிடத்தில் உள்ள விளக்கு. `விளக்கினைத் தூண்டுபவன் போல மூலசாதனத்து அவ்விளக்கினை எரியும்` என முடிக்க தன் வினை, பிறவினை இரண்டிற்கும் பொதுவான `எரி` என்னும்பகுதி, இங்குப் பிறவினையாய் நின்றது. `எரியும்` உம் ஈற்று ஏவல் வினை முற்று. தானம் என்றது மூலாதாரம் ஒழிந்த மற்றை ஆதாரங்களை, சாதனம் - தொழில் முதல் நிலைகள் இங்கு அஃது இடத்தைக் குறித்தது. `மூல சாதனத்து அவ்விளக்கு` என இயைக்க. `அவ்விளக்கு` எனப் பண்டறி சுட்டாகச் சுட்டியது, `அவ்விடத்து எழாது மடிந்து கிடக்கின்ற குண்டலிசத்தி` என்பது விளங்குதற் பொருட்டு. ஆன விதி - பொருந்திய விதிமுறை. அவை யோகநூல்களுட் கூறப்படுவன. மூலத்தான் - வழியால். `அதனில்` என்பது `அத்தில்` என மருவி வந்தது. `ஏனை` என்பது இடையில் உள்ள ஆதாரங்களைத் தழுவிற்று. கொண்டு - அகப்படுத்து.இதனால். `முன் மந்திரத்தில் வருத்துதற்கு அறிந்த உபாயம் இது` என்பது சொல்லப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage