
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப் பற்றால் மதிஒளி யாமே.
English Meaning:
Mala-Contamination is Root of All EvilBy Mala-Contamination
Was Sakti obscured;
By Mala-Contamination
Was Jnana obscured;
By Mala-Contamination
Was Param obscured;
He who is freed
Of Mala-Contamination
Is verily the Enlightened One.
Tamil Meaning:
(இதன் பொருள் வெளிப்படை.)Special Remark:
`மலம்` என அடைகொடாது கூறுமிடத்துப் பெரும் பான்மையும் `ஆணவம்` என்றே பொருள்படும். இங்கும் அவ்வாறே கொள்க. கலப்பு செம்பிற் களிம்பின் கலப்புப் போல அநாதியே உள்ளது. அதனால் அந்த ஆணவத்தின் விளைவாக இங்குக் கூறியன யாவும் அநாதியே உள்ளனவாம். தாணு - சிவன். மதி - ஞானம். இஃது ஆன்மாவின் ஞானம். `மலக் கலப்பால் இருளாய் இருந்த ஞானம், சிவக் கலப்பால் ஒளியாம்` என்றபடி. `மலம் நீங்குமாறு இது` என்பது, ஒன்று இடையிட்டு மேல் உள்ள மந்திரத்தில் கூறப்பட்டது.சத்தி, இங்கு அருட்சத்தி. `ஞானம் அழிந்தது` எனக் கூறாமல், `மறைந்தது` என்றே கூறினமையால், மலக் கலப்பு அற்றால் மதி ஒளியாதற்குத் தடையின்மையறிக.
இதனால், மலாவத்தைகட்குக் காரணம் ஆணவமும், நின்மலாவத்தைகட்குக் காரணம் அருட்சத்தியும ஆதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage