
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.
English Meaning:
Malas Inherent to JivaAnava (Egoity), Maya (Ignorance) and Karma (Action)
These the Malas (Impurities) are;
They are like the embryo, the bran and the husk
Are like the grain of rice;
They touch not the Lord, but apart stand;
Be rid of your Pasas one by one,
And adore the Lord.
Tamil Meaning:
`ஆணவம், மாயை, கன்மம்` - என மலங்கள் மூன்றாம். அவற்றை எதிர்நிரல் நிறையாக வைத்து, அரிசிக்கு முளை, தவிடு, உமி - இவைபோல்வனவாக உணர்க. ஆன்மாவும் சிவனைப் போலச் சித்துப் பொருளேயாயினும், அரிசி போன்ற ஒரு தன்மையை அஃது உடைமையால் அரிசிக்கு உமி முதலிய குற்றங்கள் அநாதியாக இருத்தல் போல, ஆணவம் முதலிய குற்றங்கள் அநாதியே உளவாக, அது சிவனைப் போலப் பதியாகாது, பசுவேயாய் நின்றது. உனது தன்மையை இங்ஙனம் நீ உள்ளவாறு உணர்ந்து, பாசங்களில் பற்றுக் கொள்ளாது விடுத்துப் பதியாகிய சிவனைப் பற்றி இன்புறுவாயாக.Special Remark:
`முளை அத்தவிடுமி போலக் காணும்` என மாற்றி உரைக்க. `ஆன்மாவும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். தண்டுலம் - அரிசி. ஆக்கம், உவமை குறித்தது நின்றது, ஆணவத்தைப் பிற சமயிகள் கொள்ளாமையால், `மலம் மூன்று` என்பதை எடுத்தோதி வலியுறுத்தினார்.இதனால், அத்துவாக்கள் யாவும் மாயையேயாக, அவை பற்றி வேறும் இருமலங்கள் ஆன்மாவிற்கு உளவாதல் கூறப்பட்டது.
``மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல்
மம்மர்செய் தணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்``
என்னும் சிவஞான சித்தியாரையும், அதற்கு மாதவச் சிவஞான யோகிகல் உரைத்த உரையையும் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage