
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.
English Meaning:
Jiva a Prey to Tattvas and PasasThe body, indriyas, mind
The intellect, will, egoity and ignorance
To these the Soul a prey falls;
If the Pasas further sprout in him,
To hell, he speeds fast.
Tamil Meaning:
தாத்துவிகங்களாகிய உடம்பு, அதில் கரணங் களாய்ப் பொருந்தியுள்ள ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், அந்தக் கரணங்கள் ஆகிய இவற்றின் இயல்பினை அறியாமையால் அவை களையே `தான்` என மயங்கிக் கெடுகின்ற அந்த உயிர், (அந்த அறியா மையை நீக்கிக் கொள்ள முயலாமல்) மேலும் மேலும் அந்த அறியா மையையே வளர்த்துக் கொண்டிருக்குமானால், அது அடைவது ஏழு நரகங்களிலும் சென்று வீழ்ந்து அங்குள்ள துன்பத்தைத்தான்.Special Remark:
`வீடு பெறுதல் இயலாது` - என்றபடி. `உடல்` என்பது பெரும்பான்மையும் தூல உடம்பையே. இந்தியம், `இந்திரியம்` என்பதன்மரூஉ. நல்வினைசெய்வார் அரியர் ஆகலின், அதன் பய னாகிய சுவர்க்கத்தை அடைதலைக் குறியாதொழிந்தார்` இந்நிலை யிலே நிற்கும் உயிர்கட்குச் சுத்த நனவாதிகள் நிகழா என்பது கருத்து. எனவே, தத்துவங்களின் இயல்பை உணருமுகத்தால் தம்மை அவற்றின் வேறாக உணர்ந்த உயிர்கட்கே திருவருள் கிடைக்கச் சுத்த நனவாதிகள் உளவாம். சிவஞானபோதத்திலும்,``இவ்வான்மாத் தன்னை அவ்விந்திரியத்தின் வேறாவான் காணவே
தமது முதல் சீபாதத்தை அணையும் ``*
என்றது காண்க. இங்குக் கூறப்பட்ட தத்துவ தாத்துவிகங்கள் வைதிக சமயத்தார் பலர் கூறுவனவேயாதலின், அவற்றை எடுத்தோத்த தாகக்கூறாது, அனுவாதமாகக் கூறினார். சிவாகமங்கள் நரகங்களைப் பலவாகக் கூறினும் `ஏழ் நரகம்` - என்பது ஒரு பொது வழக்கு.
இதனால், தத்துவஞானத்தவரே சுத்தநனவாதி பருவங்களைத் தலைப்படுவாராதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage