
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம்
ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம்
போதம் கலைகா லமேநியதி மாயையும்
நீதி அராகம் நிறுத்தினன் என்னே.
English Meaning:
Evolutes of ParaparamThe Beginningless Param,
Thus the order brought about;
Siva, Sakti, and Sadasiva,
The Isa Pure, and the noble Vidya Tattvas
Bodha, Kalas, Time, Niyati and Mamaya (Impure Maya)
—These evolutes in gradation appropriate
He established,
In wonder surpassing indeed!
Tamil Meaning:
`சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை` என்னும் சிவ தத்துவங்களையும், அவற்றின் கீழ் உள்ள `கலை, காலம், நியதி, வித்தை, அராகம், மாயை` என்னும் வித்தியா தத்துவங் களையும் அநாதி நிலையினின்றும் இறங்கி ஆதியாய் நிற்கின்ற சிவன் படைத்தருளினான் என்று உணர்க.Special Remark:
`ஆம் தத்துவம்` என்றது `அராகம்` என்பதனோடும் சென்று இயையும். `போதம்` என்றது `வித்தை` என்னும் பொருட்டாய்ப் பொதுவாக `வித்தியா தத்துவம்` எனவும், சிறப்பாக அவற்றுள் ஒன்றாகிய `வித்தை` என்றும் இருபொருள் தந்து நின்றது. கலை முதலிய ஐந்தும் கூடிய நிலையிலே ஆன்மா `புருடன்` எனப்படுவ தன்றி, புருட தத்துவம் தனித் தத்துவம் அன்றாதலின், அதனை இங்குக் கூறிற்றிலர்.இதனால், அத்துவாக்களில், `ஆறாறு` எனப்பட்ட தத்துவங் களில் சிவதத்துவம் ஆவனவும், வித்தியா தத்துவம் ஆவனவும் இவை என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage