
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.
English Meaning:
Tattvas of the Subtle Body in the Five States of ConsciousnessIn Jagrat State
All the eight Tattvas
Of the Puriyashta (Subtle) body are;
In Dream State
The three Tattvas
Of the Subtle Body are;
In Sushupti State,
Two of the Subtle Body remain;
In Turiya State,
Only one is left behind,
With Purusha.
Tamil Meaning:
(`புரியட்டக சரீரம்` - என்பது பெரும்பான்மையும் சூக்குமசரீரத்தையும், சிறுபான்மை பரசரீரத்தையும் குறிக்கும். இது சிவஞான போத இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண சிவஞான மாபாடியத்தாலும் விளங்கும்.)தன்மாத்திரை ஐந்தும், அந்தக் கரணம் மூன்றும் ஆக எட்டும் கூடியது சூக்கும சரீரம். இவ்விடத்தில் சித்தம் பிரகிருதியில் அடங்கும்.
மூலப் பிரகிருதி ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் ஆக எட்டும் கூடியது பர சரீரம்.
எனவே, `புரியட்டகம்` என்பது இவ்விரு சரீரங்கட்கும் பெயராதல் விளங்கும். (இவை இரண்டுமே இம் மந்திரத்திற் குறிக்கப்படுகின்றன.)
இரு புரியட்டக சரீரங்களும் தூல சரீரத்தோடு பொருந்தி நிற்கும் நிலையே இருவகைச் சாக்கிராவத்தையாகும். (இருவகை சகலமும், கேவலமும், இவ்வாறு சுருங்கக் கூறினாராயினும் கேவல சாக்கிரத்திலும் கனவிற் போலவே புரியட்டக சரீரம் நிற்கும் என்க.) சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், பிராணாதி பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்கள். ஆகையால் அவற்றை எண்ணாமல் விடுக்கச் சூக்கும சரீரத்தில் மூன்று அந்தக்கரணங்கள் மட்டுமே செயற்படும் நிலை கேவல சொப்பனமாம். கேவல சாக்கிரத்தல் இருவகை இந்திரியங்கள் செயற்படும். கேவல சொப்பனத்தில் அவை செயற்படா. (இங்குப் பரசரீரம் கருத்தில் கொள்ளப்படவில்லை.) பரசரீரத்தில் `பிரகிருதி, புருடன்` என்னும் இரண்டு மட்டுமே தொழிற்படும் நிலை கேவல சுழுத்தியாம். (இங்கும் பிராணன் எண்ணப்படவில்லை.) பரசரீரத்தில் புருடன் ஒன்று மட்டுமே செயற்படும் நிலை கேவல துரியமாம். (இங்கும் பிராணன் எண்ணப்பட வில்லை. ஒரு கருவியும் இன்றி ஆணவ மாத்திரம் இருத்தலே கேவல துரியாதீதம்` என்பது கருத்து.)
Special Remark:
கேவல துரியாதீதத்தில் பிரகிருதி சிறிதும் அறிவைப் பிறப்பியாது, இருளாயே இருக்கும் என்க.இதனால், கீழாலவத்தைக் கருவிகள், வேறு வேறு சரீரங்களாதல் காட்டப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage