
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
பதிகங்கள்

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதத் துரியத்தில் தான்உறல்
சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.
English Meaning:
Jagrat-atita State Leads to Turiya-In-Turiya (Para Turiya)In Jagrat-atita State
Anava (Egoity), forsooth, is;
Even when the Soul enters
The Turiya state in Jagrat-atita (Turiya-in-Turiya State)
Anava still is of Jagrat-atita state;
Jagrat-atita is,
Where Truth of Para is.
Tamil Meaning:
சகல சாக்கிரத்தில் சாக்கிரம் முதலியன நிகழுங் கால் இறுதியில் நிகழும் துரியாதீதத்தில் ஆன்மாத் தன்னையும், பிறிதை -யும் உணர்தல் இன்றி, ஆணவத்தால் விளையும் பேரிடரிலே மூழ்கி யிருக்கும். இது `தன்னுண்மை` எனப்படும். (இந்நிலை அநாதி கேவலத்தொடு ஒத்ததாகும்.)நின்மல சாக்கிரத்தில் நிகழும் துரியாதீதத்தில் ஆணவம் இன்மையான், அதில் ஆன்மாச் சிவனால் தரப்படும் பேரின்பத்தில் மூழ்கித் தன்னையும் அறியா நிலையில் இருக்கும். (இஃது ஆன்மா இறுதியில் அடையும் சாயுச்ச நிலையோடு ஒத்ததாகும். இதுவே முன்பு ஆணவத்தோடு அத்துவிதமாய் நின்றதுபோலப் பின்பு மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதமாய் நிற்கும் நிலை.)
இங்குக் கூறிய இருவகைச் சாக்கிரத்திலும் துரியாதீதத்திற்கு முன்னாதல், பின்னாதல் நிகழும் துரியத்தில் ஆன்மாத் தனக்கு உளவாகும் இன்பத் துன்பங்களை அறிவதாய் இருக்கும்.
Special Remark:
`முதல் அடியில் கூறிய சாக்கிரம் சகல சாக்கிரம்` என்பதும் `இறுதியிரண்டடிகளில் கூறிய சாக்கிரம் நின்மலசாக்கிரம்` என்பதும், இரண்டாம் அடியில் கூறியசாக்கிரம் இரண்டனையும் குறித்த பொது சாக்கிரம் என்பதும் அவ்வவற்றில் காட்டப்பட்ட அனுபவம் பற்றி உணர்ந்து கொள்ளப்படும்.இரண்டாம் அடியை இறுதியிற் கூட்டி, `சாக்கிராதீதத்தின் பக்கத்ததாகிய துரியத்தில்` எனவும், `தான் அனுபவத்தை உறல்` எனவும் உரைத்துக் கொள்க.
முதற்கண் உள்ள `ஆணவம்` தன்காரியம் உணர்த்தி நின்றது. ஈற்றில், `பரன் உண்மையில் தங்கும்` என உருபு விரித்துரைக்க.
இதனால், `சகல சாக்கிரம், நின்மல சாக்கிரம்` என்பவற்றின் இயல்புகள் அவற்றை ஒப்பிட்டுக் காட்டி உணர்த்தப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage