
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்
ஆக்கிய வந்த வயிந்தவ மால்நந்த
நோக்கும் பிறப்பறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.
English Meaning:
Only With Turiyatita State Birth Cycle EndsIf in Waking State
The Jiva realizes the Atita State
The Vaindavas (the Tattvas) that Maya caused
Will their malevolence shed;
The birth`s whirl will cease;
Glorious Mukti and Siddhi then attained;
Speech and thought cease to be.
Tamil Meaning:
புருவ நடுவிற்றானே திருவருளால் சிவத்தைத் தலைப்படும் சாக்கிரம் முதலிய அவத்தைகளில் முடிவான அதீத நிலை கைகூடுமாயின், பாச ஞானத்தை உண்டாக்க வந்த வாக்காகிய மயக்கும் பொருள் கெடும். அது கெடவே, `இனியும் வருங்கொல்` என எதிர்நோக்கி அஞ்சப் படுவதாகிய பிறப்பு, வாராதே ஒழியும். அதனால் பரமுத்தி நிலை கிடைக்கும். எவ்வாறெனில் அவ்விடத்தில் பாச ஞான பசு ஞானங்கள் தோன்ற மாட்டா ஆகையால்,Special Remark:
`ஆக்கிய` என்பது, `செய்யிய` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வயிந்தவம் - விந்துவின் காரியம். அஐவ இங்கு வாக்குக்களே. மால் - மயக்கம். நந்த - கெட. `நந்த` என்றமையால், நந்துதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. மயக்கம் தருவனவற்றை, `மயக்கம்` என்றார். பெத்தர்களுக்கு வாக்குக்கள் தெளிவைத் தருவன வாயினும், முத்தர் கட்கு அவை சிவஞானம் நிகழ்தற்குத் தடையாய் உலகுணர்வைப் பயக்கும் ஆதலின் அவற்றை, `மால்` என்றார். நோன்மை - வலிமை. ஏனை முத்திகளினும் வலியுடைத்தாய் நிலைத்து நிற்பது பரமுத்தி என்க. `வாக்கு` என்பது பாச ஞானத்தையும், `மனம்` என்பது பசுஞானத்தை உணர்த்துதலைச் சிவஞானபோதம் ஆறாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்தால் உணர்க.இதனால், `சாக்கிரத்தில் சுத்தாவத்தையைத் தலைப்பட்டோர் அவற்றுள் துரியத்திலே நின்று விடாமல், துரியாதீதத்தை அடைதல் வேண்டும்` என மேற்கூறியது, அதன் பயன் கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage