
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

சகலத்திற் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிரா தீதம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.
English Meaning:
Sakala State Subdivisions for JivaSakala-Kevala is the Jagrat-atita State;
Sakala-Sakala is the Jagrat-within-Jagrat State
Sakala-Suddha is the State of Tat-para (self-illumined)
All these in the state of Sakala occur.
Tamil Meaning:
மத்தியாலவத்தையில் நிகழும் அதீதமே சகலத்திற் கேவலமாகும். மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரமே சகலத்திற் சகலமாகும். சகலத்தில் சுத்தாவத்தையே சகலத்தில் சுத்தமாகும்.Special Remark:
மத்தியாலவத்தை, சகலத்தில் சுத்தாவத்தை இவை -களின் இயல்புகள் மேலே உணர்த்தப்பட்டன. முதற்கண் ஒன்பதாக வகுத்துக்காட்டி, இங்கு, `சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆம்` என்றது, `கீழாலவத்தை, மத்தியாலவத்தை, மேலாலவத்தை இவையும் சகலத்திற் கேவலமும், சகலத்தில், சகலமும், சகலத்தில் சுத்தமும் ஆம்`-என்பது உணர்த்துதற்கு.இதனால், முன் மந்திரத்தில் கூறியவற்றைத் தொடர்ந்து `சகலத்தில் மூன்று` - எனப்பட்ட அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage