
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

ஆம்உயிர் கேவல மாம்மாயை யின்னிடைந்(து)
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக்
காமிய மாயேய மும்கல வாநிற்பத்
தாமுறு பாசம் சகலத்த தாமே.
English Meaning:
Evolution of the Sakala State of the SoulThe Soul in Kevala State
Inert reposes;
On it the Mamaya (Asuddha Maya) acts;
By the action
The Soul receives powers of cognition;
And then mixing with Desire (Kamiyam)
And the Objects of Desire (Mayeyam)
In Pasa it full enters;
That the State of Sakala is.
Tamil Meaning:
உயிர் மாயை கன்மங்களோடு கூடாது ஆணவத்தோடு மட்டும் இருந்த நிலை கேவலாவத்தை. (இதுவே உயிர்களின் அநாதி நிலை). பின்பு இறைவன் மாயா காரியங்களைக் கூட்டுவிக்க, அவற்றால்சிறிது அறிவைப்பெற்று வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும் நிலை சகலாவத்தை.Special Remark:
எனவே, `உயிர் மாயை கன்மங்களோடு கூடுதற் கியலாத தன்மை கேவலத்திற்கும், அவற்றோடு கூடுதற்கியன்ற நிலை சகலத்திற்கும் காரணம்` என்றதாயிற்று.`உயிர் மாயையின் இடைந்து கேவலம் ஆம்` எனக் கூட்டுக. `இடைதல்` என்பது இயற்கையிலே விலகி நிற்றலைக் குறித்தது. `இடைந்தவழி` என்பது `இடைந்து` எனத் திரிந்து நின்றது. எறித்தல் - ஒளிவிடுதல். எனவே, மாயை விளக்காதல் பெறப்பட்டது. இஃது ``எறிப்ப`` என்ற குறிப்பாற் பெறப்பட்டமையால், குறிப்புருவகம். `மாயா தனுவிளக்கா`l என்றார் மெய்கண்டதேவரும். `கான்மியம்` `காமியம்` என மருவிற்று. `மூல கன்மம் காரணமாக உயிர்களால் செய்யப்பட்டது` என்பது இதன் பொருள். மாயேயம் - மாயையின் காரியங்கள். அவை தனு கரண புவன போகங்கள். இறைவனால் உறுவிக்கப்படுவனவற்றைத் தாமாக உறுவன போல வைத்து, `தாம் உறு பாசம்` என்றார். அங்ஙனம் கூறினமையால், அவை ஆகந்துக மாகிய மாயை கன்மங்களைக் குறித்தன. `அப்பாசம்` எனச் சுட்டு வருவித்து, `அப்பாசங்களால்` என உருபு விரிக்க.
இதனால், முன்னை மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட காரண அவத்தை மூன்றனுள் முதல் இரண்டு அவத்தைகளின் இயல்புகள் வகுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage